சேமிப்பு

மக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’

இந்திய அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’ சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மற்றும் திருமணத்துக்கு தேவையான பணத்தை திடீரென திரட்டுவது மிகவும் சவாலான பணி. பெரும்பாலான பெற்றோர்கள் கடன் வாங்கியே இந்த தேவையை நிறைவேற்றுகின்றனர்.
பல குடும்பங்கள் கடனாளியாவது இந்த விஷயத்தில்தான். இதற்கு தீர்வாக அமைந்திருப்பது ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’. இந்தியில் இத்திட்டம் ‘சுகன்யா சம்ருத்தி யோஜனா’ என்று அழைக்கப் படுகிறது.

சம்பாதிப்பதை சேமிப்பதற்கான வழிமுறைகள்!

வரவு எட்டணா.. செலவு பத்தணா.. என்று கண்ணதாசன் 50 ஆண்டுகளுக்கு முன்னரே பாடி சென்று விட்டார். பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய கால கட்டத்திலும் அதே நிலமைதான் இன்னும் தொடர்கிறது.
பெரும்பாலானோர் வரவைவிட செலவு அதிகமாக செய்கின்றனர். பிறகு கடனாளியாகி தத்தளிக்கின்றனர். எனவே செலவை குறைப்பது அவசியம். இந்த செலவை குறைப்பதற்கு சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். அவை குறித்து பார்ப்போம்:
சம்பளம் வாங்கும் ஒரு நபர் மாத தொடக்கத்தில் கைக்கு சம்பளம் கிடைத்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.