Feb 2015

கடன்

நமக்கு பணதேவை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. எதிர்பாராத நிகழ்வுகள் நிகழும்போது திடீரென பணம் தேவைப்படும். அத்தகைய சூழ்நிலைகளில் உதவுபவை நாம் சேமித்து வைத்திருக்கும் பணம்தான். சேமிப்பு இல்லாதபோது வட்டிக்கு கடன் வாங்க நேரிடும். வங்கி அல்லாத பிற நபர்களிடம் கந்து வட்டிக்கு வாங்கி பணம் செலவு செய்தால் கடனாளியாவது நிச்சயம். சம்பாதிக்கும் பணத்தில் வட்டிக்கே பெரும்தொகை சென்று விடும். எனவே அவசர தேவைக்கு பணம் பெற கந்து வட்டியை நாடாமல் வேறு வழியை நாடுவதே சிறந்தது. வேறு வழிமுறைகள் என்னென்ன? பொதுவாக நமது இந்தியர்களிடம் கொஞ்சமாவது தங்க நகைகளோ அல்லது நாணயங்களோ இருக்கும்.

வாய்ப்புகளுக்கான தேசமாக உருவாகி வரும் இந்தியா!. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்

நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் புத்துணர்வு கிடைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நட்புணர்வை வளர்ப்பதோடு, இந்தியாவில் முதலீடுகள் குவிவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறார் மோடி.
மோடி பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் வெளியுறவு கொள்கை ஒரு புதிய அத்தியாயத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இந்தியாவோடு நட்புறவு பேணுவதை மிகவும் விரும்புகின்றன.

இகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்!

இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரம் கூறுகிறது. உலக அளவில் சீனாவிற்கு அடுத்து அதிகம் இணையத்தை பயன்படுத்துவது இந்தியர்கள் என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது.
இணையத்தில் பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இணையம் வழியாகவே சேவையை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இ-காமர்ஸ் வர்த்தகம் வருடத்திற்கு 30 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்த இ-காமர்ஸ் துறையில் அடுத்த ஆறு மாதத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர்.

பின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..

தமிழக அரசு சிட்கோ என்று அழைக்கப்படுகிற தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தை 1971ல் தொடங்கியது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், சிறு தொழில்களை வளர்த்து எடுக்கவும் தொடங்கப்பட்ட இந்த சிட்கோவின் பணி மகத்தானது.
தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் பேட்டையை அமைத்து ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாக காரணமாக அமைந்ததே இந்த சிட்கோதான். இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

ஈஸியா சம்பாதிக்க ஈக்விட்டி

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நிதியை இரண்டு வழிகளில் திரட்டுகின்றன. ஒன்று வங்கி. மற்றொன்று பங்குசந்தை. இன்றைக்கு வளர்ந்த நிறுவனங்கள் எல்லாம் பங்குசந்தையில் நிதி திரட்டிய நிறுவனங்களே.
குறிப்பிட்ட சதவீத பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்து அவர்களையும் நிறுவனத்திற்கு பங்குதாரராக ஆக்குகிறார்கள். அந்த பங்குதாரர் வைத்திருக்கும் பங்கை ஈக்விட்டி என்றும் சொல்வார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் பங்கிற்கு அதில் முதலீடு செய்பவர் பகுதி சொந்தக்காரராகிறார்.

பணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’

மாத வருமான திட்டம் என்று அழைக்கப்படும் (MIP) ஹைப்ரிட் பிளான் இந்தியாவில் அதிகளவில் பிரபலமாகவில்லை எனினும், இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இந்த திட்டத்தில் கிடைக்கும் நிதி அனைத்தும் நிதி நிறுவனங்களிலும், வங்கி நிறுவனங்களிலும் பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானமாக வழங்கப்படுகிறது.

குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தை..முதலீடு குவியும் என எதிர்பார்ப்பு!

குஜராத் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், புதிய நிறுவனங்களுக்கு பயன்படுவதற்காகவும் குஜராத்தில் புதிய சர்வதேச பங்குச் சந்தையை அமைக்க மும்பை பங்குச் சந்தை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மும்பை, கொல்கத்தா, டில்லி, சென்னை போன்ற முக்கிய பெரு நகரங்கள் இருக்கையில் சர்வதேச பங்கு சந்தையை அமைக்க குஜராத் மாநிலம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. பிரதமரின் மோடியின் செல்வாக்கு இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு ஏற்படுத்தும் சாதகங்கள்.

.இரண்டு வருடங்களுக்கு பிறகு, வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு அறிவித்த உடனேயே சென்செக்ஸ் குறியீட்டு எண் அதிகரித்தது.
இந்த வட்டி விகித குறைப்பு, பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்க செய்யும் என்ற எண்ணத்தின் காரணமாக பங்குகள் வாங்குவது அதிகரித்தது. இது சென்செக்ஸ் குறியீட்டு எண் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது.
இதுபோல பல்வேறு நன்மைகளை இந்த வட்டி விகித குறைப்பு நமக்கும் அளிக்கும். அது என்னென்ன என்பதை பார்போம்:

குறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்

அவசர தேவைக்கு கடன் வேண்டுமென்றால் எல்.ஐ.சி பாலிசியை வைத்தும் கடன் பெற முடியும். அதற்காக சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்:
3 ஆண்டுகளுக்கு மேலாக எல்.ஐ.சி. பாலிசியில் பிரீமியம் கட்டுபவர்கள் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள். பாலிசியின் தொகை, காலம் இவற்றை பொறுத்து எவ்வளவு கடன் தொகை என்பது நிர்ணயிக்கப்படும்.
இந்த கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன் திட்டங்களை காட்டிலும் குறைவே. ஏனெனில் எல்.ஐ.சி.க்கு இது பாதுகாப்பான கடன் ஆகும்.

டெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்

இந்தியாவில் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு இவற்றை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தள் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம்ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Pages