June 2015

தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு முக்கிய பங்குண்டு. இது 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது.

புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை விரிவாக்குவதற்கும், தொழில்களை நவீனமயமாக்குவதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், தொழிற்சாலைகளை சீரமைப்பதற்கும், மின்னுற்பத்தி சாதனங்களை வாங்குவதற்கும், நடைமுறை மூலதனம் பெறுவதற்கும் தொழில் முதலீட்டுக் கழகம் கடன் தந்து உதவுகிறது.

முதலீடுகளை குவிக்க உதவிய மோடியின் சீன பயணம்

பதவியேற்று ஒரு வருடத்துக்குள் 18 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சாதனை படைத்திருக்கிறார் மோடி. அவரது வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தாலும்,  அதைப் பொருட்படுத்தாமல் இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்து குவித்து, பெரும் பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மோடி.
 

தென்னை விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தென்னை மர காப்பீட்டு திட்டம்

தென்னை மர காப்பீட்டு திட்டம்,  தென்னை விவசாயிகளின் பாது காவலனாக திகழ்ந்து கொண்டி ருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை, இயற்கை சீற்றங்கள் போன்றவற்றால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பலன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ தென்னை மரக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு பெறமுடியும்.
தகுதிகள் என்ன?

உற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை

காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலும் நெல் (சம்பா & குறுவை) கரும்பு போன்ற அதிக தண்ணீர் தேவைப்பாடு மிகுந்த பயிர்களை சார்ந்தே வாழ்கின்றனர். இத்தகைய பயிர்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறுதான்.
 

நலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றாலே மிகவும் வளமாகத்தான் இருக்கும் என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்வது நல்லது.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நலிவடைந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனம் நலிவடைந்த நிலைக்குச் சென்றிருக்கிறது என்பதற்கான வரையறை என்ன?

முதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...

                                 “முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை’’
                                  “ஆக்கம் கருதி முதல் இழக்கும்’’ என்பது குறள்

நமது சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதே இல்லை. அதே சமயத்தில் முதல் இல்லாமல் எந்தச் சமுதாயமும் இல்லை. தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருக வேண்டுமெனில் முதல் அவசியம். எனவே இந்த முதலை போடுபவர் தேவை. முதலை போடுவதால் தான் அவருக்கு முதலாளி என்று பெயர்.

காஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு

காஃபி மழை காப்பீட்டுத் திட்டமானது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மத்திய காஃபி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைப்படி இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழையின் போக்கை நிர்ணயம் செய்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுவது உடை. உடை அணிவது தேவைக்கு மட்டுமின்றி,  தோற்றத்தை உயர்த்திக் காட்டவும் அணியப்படுகிறது. எனவே தான் ஆள்பாதி... ஆடை பாதி என்று சொன்னார்கள்.

உடைகள் உடுத்துவதில் ஆண்களும், பெண்களும் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றனர். பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் ஆண்களுக்கான உடைகளும், பெண்களுக்கான உடைகளும் தயாரிக்கப்படுகின்றன.

சாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்?

சாதனையாளர் ஆவதற்கான முதல்படியே தன்னை அறிதல்தான். நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றார் கண்ணதாசன்.

ஒருவர் முதலில் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தனித்தன்மை என்பது திறமைகளை உள்ளடக்கியது. அத்திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவை.
மனத்தை எந்த அளவுக்கு பாங்கோடு வைத்திருக்கின்றோமோ அந்த அளவுக்கு வளர்ச்சி சாத்தியம்.
அதனால்தான் வள்ளுவர் பாடினார்:

Pages