சாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா?

இந்தியாவில் தொழிற் சாலைகள் பெருகுவதற்கு முன்பு சாதி அடிப்படையி லான தொழில்முறை இருந்து வந்தது. இது

வருணாசிரம தர்மம் என்றழைக்கப் பட்டது.
சாதி அடிப்படையில் தொழில்முறை இருந்த காரணத்தால் இந்தியாவில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக

ஜாதி ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் தீண்டாமை என்கிற கொடிய செயலும் இந்தியாவில்

நிலவியது.
விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும் தீண்டாமைக் கொடுமை ஆங்காங்கே நடந்து

வருகிறது.
இந்தியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதி அடிப்படையிலான தொழில்முறை நிலவி வந்தது.
நல்ல நோக்கத்திற்காகத்தான் தொழில் அடிப் படையிலான சாதிமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அதுவே சாதி

ஏற்றத்தாழ்விற்கும் தீண்டாமைக் கொடுமைக்கும் வித்திட்டு விட்டது.
பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு பிரிவுகளுக்குள் மக்கள் கொண்டு வரப்பட்டனர். இந்தியாவில்

உள்ள அனைத்து சாதிகளும் இந்த நான்கு பிரிவுகளுக்குள் அடங்குவர்.
பிராமணர்
இந்த சாதி பாகுபாட்டில் முதல் இடம் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது. ஞானம், அறிவு, புலமை மிகுந்தவர்கள்.

கடவுளுக்கு அர்ச்சனை செய்வது, சடங்குகள் மேற்கொள்வது, புரோகிதம் செய்வது போன்ற பணிகள் பிராமணர்களுக்கே

வழங்கப்பட்டது. சாஸ்திரங்கள் அனைத்தும் பிராமணர்களாலேயே எழுதப்பட்டன. அரசர் களுக்கு குருவாகவும்

ஆலோசகர்களாகவும் பிராமணர்களே நியமிக்கப்பட்டனர்.
அதேபோல இராஜ தந்திரியாகவும், அமைச்சர்களாகவும் அரசவையில் பிராமணர்கள் நியமிக்கப்பட்டனர். ஆன்மீகத்தில்

உயர்நிலையை அடையும் தகுதியும் அக்காலத்தில் பிராமணர்களுக்கே வழங்கப்பட்டது.
பிராமண பிரிவில் உள்ள சாதிக்கள் உயர் சாதியாக கருதப்பட்டன. குணவகையில் பிராமணர்கள் சாத்வீக குணம்

கொண்டவர்கள் என்று வரையறை செய்யப்பட்டது.
சத்ரியர்
ரஜோகுணம் கொண்டவர்கள். பிடித்தமான விஷயத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். நாட்டைக்

காப்பதில் முனைப்போடு செயல்படுபவர்கள். மக்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்கள். தேசத்தை

உயிர்மூச்சாக கருதுபவர்கள்.
வைசியர்
வணிகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வைசியர் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களாக

திகழ்ந்தனர். அரசுக்கு இவர்கள் அதிகமான வரி வருமானத்தை ஈட்டித் தந்தனர். இதனால் அரசு இவர்களுக்கு பல்வேறு

சலுகைகளை வழங்கியது. பெரிய பண் ணையாளர்களாகவும் நிலச்சுவான் தாரர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர்.
சூத்திரர்
கடின உழைப்பை மேற்கொள்ளும் உழைப்பாளிகள் சூத்திரர் பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டனர். மற்ற மூன்று

பிரிவினரும் சூத்திரர்களின் உழைப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் சூத்திரர்களைப் பொருளாதார ரீதியாக

முன்னேற விடாமல் தடுத்துவிட்டனர். காலங்காலமாக ஒவ்வொரு தலைமுறையும் குலத் தொழிலையே மேற்கொள்ள

வேண்டி இருந்தது. மற்ற மூன்று வருணத்தினரும் சூத்திரர்களை இழிவாகவே கருதினர்.
பஞ்சமர்
சூத்திரர்களைவிட கீழான நிலையில் உள்ளவர் களைப் பஞ்சமர் என்றழைத்தனர். சூத்திரர் களுக்காவது சொந்த நிலம்

இருந்தது. பஞ்சமர்களுக்கு நிலம் கூடக் கிடையாது. பஞ்சப் பரதேசி என்று திட்டுவதைக் கேட்டிருப்பீர்கள்.
இந்த சொல் பஞ்சமர் என்கிற வார்த்தையிலிருந்து தான் பிறந்தது. பஞ்சமர்களை உயர் சாதிக்காரர்கள் தீண்டத்

தகாதவர்களாக கருதினார்கள். அவர்களைத் தொட்டால் பாவம் என்ற கருத்தைப் பரப்பினார்கள்.
இப்படி இந்தியாவில் சாதிப் பிரிவினை இருந்த காரணத்தால் காலங்காலமாக சாதி ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. சாதி

அடிப்படையில் தொழில் என்ற முறை உலகில் இந்தியாவிலும் நேபாளத்திலும் மட்டும்தான் நிலவியது.
நிலை மாறிவிட்டது
இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் காரணமாக உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் பெருகின.

ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு இந்தியாவிலும் தொழிற்சாலைகள் பெருகின.
இதனால் சாதி அடிப்படையிலான தொழில் முறை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்தது. தற்போது முற்றிலும்

தகர்ந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆனாலும் சாதி ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் தீண்டாமைக் கொடுமையும்

இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

ஸ்ரீ

Issues: