எப்போதும் பாசிட்டிவாக இருங்கள்...

தான் ஓர் அறிவாளி என்று கர்வம் கொண்டு ஒருவன் செயல்பட்டு விட்டால் மட்டும் வாழ்க்கையில் ஜெயித்துவிட முடியாது. அப்படி ஒருவன் ஜெயித்ததற்கான சான்று எதுவும் வரலாற்றில் கிடையாது. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது தான் தன்னம்பிக்கை. 
“உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்“ என்பது வெளிநாட்டு அறிஞர் ஒருவரின் கூற்று. தன்னம்பிக்கை உள்ளவன் இந்தக் கூற்றை வாழ்க்கையில் கடைபிடிக்கிறான். அறிவாளியோ இந்தக் கூற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்கிறான்.
பல அறிவாளிகள் தன்னம்பிக்கை இல்லாமல் அவநம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் தோற்றுப்போகிறார்கள். குறைவான அறிவை வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற மனிதர்கள் இந்த உலகில் ஏராளம். 

வாழ்க்கை என்பது வாய்ப்பு களும் சமரசங்களும் நிரம்பிய களம். அந்தக்களத்தில் வெற்றி பெறுவது அவரவர் அணுகு முறையைப் பொறுத்து அமை கிறது. 
கத்தியை ஆளைக் கொல்வதற்கும் பயன்படுத் தலாம், அறுவைச் சிகிச்சை செய்து ஆளைக் காப்பாற்று வதற்கும் பயன்படுத்தலாம். தன்னம்பிக்கை உள்ளவன் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்து கிறான். அவநம் பிக்கை கொண் டவன் கொலை செய்யப்  பயன் படுத்து கிறான்.

எங்கெல் லாம் மாற்ற மும் முன் னேற்றமும் நிகழ்கிறதோ அங் கெல்லாம் அவற்றை ஒரு தனிமனிதர் ஏற்படுத்தி யிருப்பார். அந்த தனி மனிதர் எதைக் கொண்டு சாதித்தார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவரது உள்ளத்தில் தனன்ம்பிக்கை குடிகொண்டிருப்பது தெரியவரும். 
ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து படையை நடத்திச் செல்வது ஒரேயொரு ராணுவ தளபதிதான். அந்த தளபதியை போன்றவர்தான் முன்னேற்றத்தை நிகழ்த்திக் காட்டும் தனிமனிதரும். அவரால் பல மாற்றங்கள் நிகழும். 

தன்னம்பிக்கை யாளர்கள் அதிர்ஷ்டத் தால் வெற்றி பெறுவதில்லை. அளவுக் கதிகமான பயிற்சியும் முயற்சியும் அவர்களை வெற்றியாளர் களாக்கு கின்றன.
உலகில் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த தற்கொலைக்கு காரணம் என்ன?.. அவநம்பிக்கைதான் காரணம்.. எதிர்காலம் குறித்த அச்சம் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது. ஆனால் தன்னம்பிக்கையுள்ள மனிதர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்கிறார் இன்ஸ்பயர் இளங்கோ.  இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான இவர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர். இவர் கூறுகிறார்:

“ஒவ்வொரு மனிதனும் அவமானப்படும்போது துவண்டு போகாமல் எழ வேண்டும். பார்வையற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைப்பதைத் தவிர்த்து சிறப்புத் திறனாளிகள் என்று அழைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு எதிரான சவால்களை எதிர்த்து சாதிக்கிறார்கள்.
தாய்மொழியை சரியாக பேசக் கற்றுக்கொள்வது தன்னம்பிக்கை அளிக்கும். பெற்றோரும், ஆசிரியர்களும் தமிழ்மொழியின் சிறப்பு எழுத்துக்களை சரியாக உச்சரிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி, ஒரு மனிதனுக்கு நிச்சயம் தன்னம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு செயல்களையும் மீண்டும், மீண்டும் முயற்சிக்கும் போதுதான் அது சிறப்படையும்.

பெரும்பான்மையான விளம்பரங்கள், சிறப்பு திறனாளியான எனது குரலை தாங்கி வருகின்றன.  இதற்கு காரணம் நான் வளர்த்துக்கொண்ட திறமைகள்தான். மேலும், பார்வையற்ற நபர் விளம்பர குரல் தருபவராக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளேன். எனவே, ஒவ்வொருவரும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்“ 
இன்ஸ்பயர் இளங்கோ, தான் ஒரு மாற்றுத்திறனாளி..  ஆகையால் தன்னால் சாதிக்க முடியாது என்று நினைத் திருந்தால் அவரால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்க முடியுமா? அவரது சாதனைக்கு அடிப் படையாய் அமைந்தது அவரது தன்னம் பிக்கையே. 

ஒவ்வொருவரது  வெற்றியும் தோல்வியும் அவரவர்  மனநிலையை பொறுத்தே அமைகிறது என உளவியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்போது வெற்றிக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும், தன்னம்பிக்கை குறையும்போது தோல்விக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும் உளவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் காப்புறுதியாக அமைகின்றது. எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு அல்லது ஒரு வெற்றியாளனாக மாறுவதற்கு முதலில் இருக்கவேண்டியது மன உறுதியே.அதாவது தன்னம்பிக்கையே. இன்னொரு உதாரணம் பார்ப்போம்...

குமரன் என்பவர் பிறந்த போதே மூளை முடக்குவாத நோ யால் பாதிக்கப் பட்டவர். குழந்தைப் பருவத்தில் அவரைப் பரி சோதித்த மருத்து வர், இந்தக் குழந்தை ஒரு சதைப் பிண்ட மாகத்தான் இருக்கும், ஏனெனில் இக் குழந்தைக்கு அறிவுத் திறன் வளராது என்று சொன்னார். 
ஆனால் டாக்டரின் கணிப்பை பொய்யாக்கி, அக்குழந்தை இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த இளைஞனாகி விட்டது. ஆம்.. குமரன் இன்றைக்கு மிகவும் புத்திசாலி இளைஞனாக திகழ்கிறார்.
திருக்குறளையும், தமிழ் பக்தி இலக்கியங்க ளையும் கரைத்துக் குடித்திருக்கிறார். பலவற்றை மனப்பாடமாகச் சொல்லும் திறன் பெற்றிருக்கிறார்.  
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப்பட்டம் பெற்று, தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 
குமரனின் வெற்றிக்கு பின்னணியாக இருந்தது அவரது குடும்பம்தான். குழந்தையின் விதி இதுதான் என்று பெற்றோர் சும்மா இருக்கவில்லை. எந்த விதங்களில் எல்லாம் குமரனை மேம்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் மேம்படுத்தி னார்கள். 

குழந்தையின் மூடிய விரல்களைத் திறக்க ஆரம்பித்தது முதல் ஏராளமான உடல் இயக்கப் பயிற்சிகளைப் பல ஆண்டுகள் தொடர்ந்து செய்தது வரை  குமரனுக்கு உதவியதோடு  ஊக்கமும் கொடுத்தார்கள். 
பெற்றோரின் தன்னம்பிக்கை குமரனுக்குள்ளும் ஊடுருவியது. வாழ்க்கையில் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற மனஉறுதி கொண்டார் குமரன்.உறுப்புகள் எல்லாம் சரியாக இருந்தும் முடங்கிப் போகும் மனிதர்கள் வாழும் இந்த உலகில், கால்கள் வலுவிழந்து  தனியாக நிற்கக் கூட முடியாத நிலையிலும் சாதித்துக் கொண் டிருக்கிறார் குமரன்.

அவர் தனது நூலில் இப்படி எழுதுகிறார்:  “வாழ்க்கைப் பயணத்தில் அம்மாவும் நானும் எதிர் கொண்ட வலிமிகுந்த அனுபவங்கள் ஏராளம். அதிலும் எனக்கான உடல் இயக்கப் பயிற்சிகள் நடக்கும் சமயங்களில் சிறுவனான நான் வலி தாங்காமல் அலறிய தருணங்களை அவர் கடந்து வந்த விதத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் கன்னங்களுக்குக் குடை தேவைப்படும் அளவுக்குக் கண்ணீர் வருகிறது. 

எந்தக் காரணத்திற்காகவும் பயிற்சிகளைத் தவிர்க்க என்னை அனுமதிக்காத அம்மாவின் கண்டிப்பு மிகுந்த அன்பு தான் என்னை இந்த நூலை எழுத வைத்திருக்கிறது. ஒரு வேளை வலிக்குப் பயந்து என் தாய் பயிற்சிகள் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் முதலில் என் தசைகள் இறுக்கம் அடைந்திருக்கும். 
அதனால் ஒட்டுமொத்த செயல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கும். இதை இப்போது நான் காணும் என்னைப் போன்றோருக்கு முடிந்த வரையில் எடுத்துக்கூறி வருகிறேன். அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் அவரவர் குறைகளின் தன்மைக்கேற்ற பயிற்சிகளைக் கண்டிப்பாகத் தொடர வேண்டும் என அன்புடன் பரிந்துரைக்கின்றேன்”

குமரனின் இந்தக்கருத்து மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. மனிதர்களின் சாதனைகளுக்கு தடையாக இருப்பது அவர்களது எதிர்மறை எண்ணங்கள்தான். 
குமரனோ எதையும் பாசிட்டிவாக சிந்தித்தார். அவரது மனதில் சாதிக்கவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. இந்த எண்ணம் அவரை ஒரு வெற்றியாளராக்கியது. எனவே எப்போதும் பாசிட்டிவாக இருங்கள்.

தொடரும்...

Issues: