குறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு

நம் மக்கள் வங்கி, தங்கம் போன்றவற்றில் அதிக முதலீட்டை மேற்கொள்வது சரியான அணுகுமுறை இல்லை என்றே சொல்லவேண்டும்.
ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்யவேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒரு முதலீட்டு நிறுவனம் பொதுமக்களிட மிருந்து நிதியை திரட்டி, முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை, தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்ட்டின் அடிப்படை.
தமிழில் இது பரஸ்பர நிதி என அலைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர் இருவரும் ஆதாயம் அடைவதால் தான் மியூச்சுவல் ஃபண்ட் என பெயரிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் இருக்கிறது. ஆனால் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.
ரிஸ்க் எடுக்காமல் குறைந்த வருமானம் வந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன.
ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, ரிஸ்க் அளவிற்கு ஏற்றார் போல முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தவிர மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.
வங்கி வைப்புத்தொகையில் முதலீடு செய்தால் 9 சதவிகித வட்டி வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும்.
ஆனால் பங்குச்சந்தையில் அதிக லாபம் வர வாய்ப்பு இருந்தாலும், அதிக நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை.
இந்த பிரச்சனை பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் ஒரு சில பங்குகள் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை.
கடந்த ஐந்தாண்டுகளில் சில ஃபண்டுகள் அதிக வருமானத்தை கொடுத்திருகின்றன.
குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு ரூ 80 லட்சமாக இருக்கும் என்ற தகவலை மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலத்திலும் இந்த ஏற்றம் தொடரும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒருவர் முதலீடு செய்யும் பணம் எங்கெங்கு, என்னென்ன சதவிகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக 365 நாளும் தெரிந்துகொள்ளலாம்.
இந்த சிறப்பம்சம் வேறு எந்த முதலீட்டுத் திட்டங்களிலும் கிடையாது. மியூச்சுவல் ஃபண்டுகள் போல் மிகவும் வெளிப்படைத்தன்மை நிறைந்த வேறொரு முதலீடு இல்லை என்று சொன்னால் அது மிகையில்லை.
மொத்த மக்கள் தொகையில் சுமார் 5 சதவிகிதத்தினர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் இதுவரை முதலீடு செய்திருக்கிறார்கள். சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பரஸ்பர நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை முந்தையஆண்டைவிட 32 சதவீதம் கூடுதலாக இருந்தது. நவம்பர் இறுதியில் அந்நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ. 3 லட்சம் கோடியாகும்.
இது வரை பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த தொகையின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனங்கள் நிர்வகித்த மொத்த தொகையின் மதிப்பு ரூ. 8.26 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் செயல்பட்டு வரும் 45 நிறுவனங்கள், 1,800 நிதித் திட்டங்களை அளித்து வருகின்றன. இதில் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும் திட்டங்களின் எண்ணிக்கை 1,252 ஆகும். பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 339 ஆகும்.
இந்த நிலையில் இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை சென்றவடைவதற்கு ஆம்ஃபி (கிssஷீநீவீணீtவீஷீஸீ ஷீயீ விutuணீறீ திuஸீபீ ஷீயீ மிஸீபீவீணீ) என்ற அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆம்ஃபி அமைப்பு எடுத்து வருகிறது.
10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில் செபி அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்த அமைப்பின் முக்கிய இலக்காகும்.
தற்போது நம் நாட்டில் மொத்த சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியாக இருக்கிறது. இதனை அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 10 கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.
கேன் (சிகிழி - சிஷீனீனீஷீஸீ கிநீநீஷீuஸீt ழிuனீதீமீக்ஷீ) என்கிற வசதியை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் களுக்கு இந்த அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமையும்.
உதாரணமாக,ஒருவர் ஐந்து வேறு வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், அந்த அனைத்து ஃபண்ட் விவரங்களும் ‘கேன்’ என்கிற காமன் அக்கவுன்ட் நம்பரின் கீழ் வந்துவிடும்.
இதன் மூலம் ஒருவர்,தான் எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறோம் என்கிற விவரத்தை ஒரே ஸ்டேட்மென்ட் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் பிள்ளைகளின் கல்வி, திருமணம், பணி ஓய்வு போன்றவற்றிற்கு திட்டமிட முடியும்.
இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு என்பது குறைவாக இருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்துவரும் பட்சத்தில் ரிட்டையர்மென்ட் காலத்தையும் சிறப்பாக கழிக்க முடியும்.

பாண்டியன்

Issues: