பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

சமீப காலமாக கிரிஸ்டல் நகைகளை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உண்டு. செயின் பறிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு, அதிக விலை கொண்ட தங்க நகைகள் இவற்றால் நடுத்தர வர்க்க குடும்ப பெண்கள் தங்க நகைகளின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. தங்க நகையின் இடத்தை, கிரிஸ்டல் நகைகள் பெற்றுள்ளது.
கிரிஸ்டல் நகைகளின் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக வும், அழகாகவும் காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் போன்றோர் மத்தியில் கிரிஸ்டல் நகைகள் பிரபலமடைந்து வருகின்றன.
இந்த கிரிஸ்டல் நகையை பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்து வருமானம் ஈட்டலாம். இத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். விலை மிக குறைவாக இருப்பதால் பல பெண்கள் ஆர்வத்தோடு இந்நகையை வாங்குகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் அவரவர் உடைக்கேற்ப மேட்சிங்காக அணிய, பல்வேறு வண்ணங்களில் கிரிஸ்டல் நகைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். இத்தொழிலை செய்வதற்கு பெரியளவில் பயிற்சி எதுவும் தேவையில்லை.
ஒரு நபர் ஒரு நாளில் 8 மணி நேரத்தில் சிறிய அளவு கிரிஸ்டல் நகையை 50 எண்ணிக்கை வரை தயாரிக்க முடியும். நடுத்தர அளவு என்றால் 15, பெரிய அளவு என்றால் 20 எண்ணிக்கை வரை தயாரிக்க முடியும். சிறிய அளவு நகைக்கு ரூ.90 முதல் ரூ.110 வரை செலவாகும். நடுத்த அளவுக்கு ரூ.150 முதல் ரூ.160 வரையும், பெரிய அளவுக்கு ரூ.200ம் செலவாகும். சிறிய அளவிலான 50 கிரிஸ்டல் நகை கள் தயாரிக்க உற்பத்தி செலவு ரூ.5,500. நடுத்தர அளவு 15 நகை தயாரிக்க ரூ.2,600, பெரிய அளவு 20 நகை தயாரிக்க ரூ.4,000 தேவைப்படும். அனை த்து வகைகளையும் கலந்து தயாரிக்க சராசரியாக ரூ.5 ஆயிரம் போதும்.
ஒரு நாள் உற்பத்தியாகும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் நகைகளை குறைந்தபட்சம் 30 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்க முடியும். இதன் மூலம் ஒரு நாள் வருவாய் ரூ.6,500. இதில் லாபம் ரூ.1,500. இதை உழைப்பு கூலியாகவும் எடுத்து கொள்ளலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும்.
ஒரு நாள் தயாரித்ததை விற்ற பின், அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு அடுத்த உற்பத்தியை தொடங்கலாம். இது வீட்டில் இருந்தவாறு தொழில் செய்பவர்களுக்கு பொருந்தும். விற்பனை அளவுக்குகேற்ப உற்பத்தியை அதிகரித்தால், வருவாய் கூடும்.
தயாரிப்பது எப்படி?
கிரிஸ்டல் நகை தயாரிப்பு என்பது தங்க, வெள்ளி நகைகளை போல் உருக்கி, தட்டி செய்வதல்ல. ரெடிமேடாக உள்ள பல வண்ண கிரிஸ்டல் மற்றும் இணைப்பு பொருட்களான சக்கரியா, பால் ஆகியவற்றை சேர்த்து கோர்ப்பதுதான் கிரிஸ்டல் நகை.
முதலில் கிரிஸ்டல் வயர் கம்பியை கட் டரை கொண்டு தேவையான அளவுகளில் வெட்டி கொள்ள வேண்டும். 2 பேர் கூட்டாக செய்தால், முதலில் டாலரை கோர்த்து நடுவில் தொங்கவிட்டு, இரு முனைகளில் ஒரு பால், ஒரு சக்கரியா, ஒரு கிரிஸ்டல் கல் ஆகியவற்றை வரிசைப்படி கோர்க்க வேண்டும். அதே பாணியில் தொடர்ந்து கோர்த்து வர வேண்டும்.
இவ்வாறு இருபுறமும் கோர்த்து முடிக்கும் இடத்தில் கியர் லாக்கை கோர்த்து கட்டிங் பிளேயர் மூலம் முடிச்சு போட வேண்டும். இங்கு ஊக்கு, காந்தம் அல்லது ஸ்க்ரூ பொருத்தினால் கிரிஸ்டல் நகை ரெடி.
தேவையான பொருட்கள்:
இளம் மற்றும் அடர்த்தியான பல வண்ண கிரிஸ்டல் சிறியது முதல் பெரியது வரையில் 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ஆகிய எண்களில் கிடைக்கும். எண் 2 கிரிஸ்டல் 90 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.65.
எண் 4 ரூ.75, எண் 6 ரூ.95, எண் 8 முதல் 18 வரை ரூ.100. சக்கரியா 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.52, கோல்டு பால் 100 எண்ணிக்கையுள்ள ஒரு ரோல் ரூ.19. கியர் வயர், கோல்டு மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்.
100 மீட்டர் கொண்ட ஒரு ரோல் ரூ.65. கியர் லாக் 100 எண்ணிக்கையுள்ள ஒரு பாக்கெட் ரூ.52. ஊக்கு ஒரு செட் ரூ.7, காந்த ஊக்கு ஒன்று ரூ.10, ஸ்க்ரூ செட் ரூ.7 முதல் ரூ.10. கட்டர், பிளேயர் ஆகியவை தலா ரூ.100. நகரங்களில் உள்ள பேன்சி ஸ்டோர்களில் இந்த பொருட்கள் கிடைக்கின்றன.
எனவே சுயதொழில் செய்ய நினைக்கும் பெண்கள் கிரிஸ்டல் நகையை வீட்டிலேயே செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். இந்த நகையை தயாரிப்பது குறித்த பயிற்சியை சில சுய தொழில் பயிற்சி நிறுவனகளும் வழங்குகின்றன.
இப்பயிற்சி மையங்களில் விதவிதமான டிசைன்களில் கிறிஸ்டல் நகைகளை செய்ய பயிற்சி தருகின்றன. வருமானம் ஈட்ட நினைக்கும் பெண்கள் இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று கிறிஸ்டல் நகை தயாரிப்பில் ஈடுபடலாம்.
-

Issues: