இந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..! டாலரின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா?

உலகம் முழுவதும் அமெரிக்க டாலரில் வர்த்தகம் நடைபெறுவது, அமெரிக் காவின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும்.
டாலரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து யூரோவை அறிமுகப்படுத்தின. ஆனாலும் டாலரின் செல்வாக்கை கட்டுப்படுத்த யூரோவால் முடியவில்லை.
ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கும் தமது நாட்டு நாணயங்கள் உலக அளவில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று ஆசைதான்.
ஆனால், அமெரிக்க டாலரோ யாரும் வெல்ல முடியாத உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் எதேனும் ஒரு வகையில் அமெரிக்காவை சார்ந்து இருக்க வேண்டியதே இதற்கு முக்கிய காரணம்.
ஆனாலும் வல்லரசு நாடுகள் சில தங்கள் நாட்டு நாணயங்கள் கோலோச்சுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகின்றன.
அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா உலக அளவில் ஒரு முதன்மை பொருளாதாரமாக மாற இந்திய ரூபாய் full convertibility [முழுமையான மாற்று] நிலையை அடையவேண்டும் என்று நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அடுத்த சில வருடங்களில் இந்திய ரூபாய் யீuறீறீ நீஷீஸீஸ்மீக்ஷீtவீதீவீறீவீtஹ் நிலையை அடையும் என்று நம்புவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்திய ரூபாயை உலக அளவில் ஒரு முதன்மை பணமாக எடுத்துச்செல்லக் கூடிய முயற்சி இனி நடைபெறும் என்பதை மேற்சொன்ன கூற்றுகள் உணர்த்துகின்றன.
அதற்கு முதலில் full convertibility நிலையை ரூபாய் அடையவேண்டும். அதற்கான முயற்சியை இந்தியா தொடங்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்தியா விடுதலை அடையும்வரை, வெளிநாட்டுத் தேவைகளைப் பெற இங்கிலாந்து நாட்டின் “பவுண்ட்’ மதிப்பீட்டின் பேரில் பெரும்பாலாக உடன்பாடுகள் செய்யப்பட்டன.
இந்திய விடுதலைக்குப் பிறகு, உலக மார்க்கெட்டில் அமெரிக்க டாலர் வலிவான இடத்தைப் பெற்றுவிட்டது.
அமெரிக்க டாலருடன் இந்திய ரூபாயைத் தொடர்புபடுத்த வேண்டிய கட்டம் ஆரம்பமானது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு டாலருக்கு ஒரு இந்திய ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.
பிறகு உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் உலக வங்கியும், சர்வதேசச் செலாவணி நிதியமும் (ஐ.எம்.எப்) இந்திய ரூபாயின் மதிப்பீட்டைத் திருத்தியாக வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தின. இதன் காரணமாக 1966 ல், இந்திய ரூபாய் மதிப்பு 35 சதவிகிதம் குறைக்கப்பட்டது.
1991ல் இந்தியப் பொருளாதாரம் சந்தைமயத்தை நோக்கிச் சென்றபோது பன்னாட்டுச் செலாவணி அமைப்பின் வற்புறுத்தலால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.24 என குறைக்கப்பட்டது.
அதன் பிறகு ரூபாய் மதிப்பீடு மார்க்கெட் நிலவரப்படி படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64 ஆக உள்ளது. நமது நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரித்ததற்கு, ரூபாய் மதிப்பு சரிவு முக்கிய காரணமாகும்.
இந்த நிலை மாற வேண்டுமெனில் இந்திய ரூபாய், மாற்றுச் செலாவணியாக ஆகும் நிலை உருவாக வேண்டும். இதற்கு மத்தியஅரசின் நடவடிக்கை உதவும் என நம்புவோமாக
full convertibility என்பது......
மற்ற நாட்டு நாணயத்திற்கு இணையாக இந்திய ரூபாயை மாற்றித்தரும் பணிகள் நடைபெறும் இடம் அந்நிய செலாவணி சந்தையாகும்.
வியாபாரம், வெளிநாட்டுச் சுற்றுலா போன்றவற்றிற்கு தேவைப்படும் அந்நிய செலாவணியை எவ்வித முன் அனுமதியும் இன்றி அந்நிய செலாவணி சந்தையில் வாங்கவோ, விற்கவோ முடியும்.
ஆனால் அந்நிய நாட்டில் முதலீடு செய்ய அந்நிய செலாவணியை பெற வேண்டுமெனில் ரிசர்வ் வங்கியைத்தான் நாட வேண்டும். அதேபோல அந்நிய நாட்டினர் நம் நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமென்றாலும் அவர்கள் நாணயத்தை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கியையே நாட வேண்டும்.
இவ்வாறு நடை பெறும் பணிக்கு partial convertibility என்று பெயர்.
எல்லா நாடுகளுமே இப்படித்தான் அந்நிய செலாவணிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன அமெரிக்காவை தவிர. ஏனெனில் அமெரிக்கா நாணயம் full convertibility அந்தஸ்தைப் பெற்றதாகும்.
ஒரு அமெரிக்கர் தனது நாட்டு டாலரை கொண்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எளிதாக செலாவணி மாற்றம் செய்ய முடியும்
உறுதியான பொருளாதாரக் கொள்கை வேண்டும்
full convertibility நிலையை அடைவது என்பது சாதாரண பணியல்ல. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் பவுண்ட் நாணயம் உலகளவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது.
full convertibility நிலையை இரண்டாம் உலகப்போர் முடியும் வரை மட்டுமே அந்நாட்டால் தக்கவைக்க முடிந்தது. பிறகு அந்த இடத்தை அமெரிக்க டாலர் ஆக்கிரமித்துக் கொண்டது.
70 ஆண்டுகளுக்கு முன்பு டாலர் ஆக்கிரமித்த அந்த இடத்தை எந்த நாட்டு நாணயத்தாலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை.
இந்திய ரூபாயால் டாலரை அசைக்க முடியாவிட்டாலும் டாலருக்கு அடுத்த அந்தஸ்தை பெறுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. அதற்கு உறுதியான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
நமது நிதித்துறையின் அங்கமான வங்கிகள் திறமையுடன் செயல்பட வேண்டும். அரசின் நிதிப் பற்றாக்குறை குறைவாக இருக்க வேண்டும்.
நாட்டின் பணவீக்கமும், வட்டி விகிதமும் குறைவாக இருக்கவேண்டும். அதற்கு அவசியமான பொருளாதாரக் கொள்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
நிதி திரட்டுவது எளிது
full convertibility இருக்கும் போது நமது நாட்டில் உற்பத்தியும் வியாபாரமும் செய்வது லாபமானது என்று கருதி அந்நிய முதலீட்டாளர்கள் நமது நாட்டில் அதிகளவில் முதலீடு செய்வர்.
இது நமது நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச்செய்யும். அதேபோல நமது நாட்டினர் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்வது இன்னும் எளிதாகும்.

கலை

Issues: