தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’

நிறுவனங்களின் செயல்பாட்டை கண்டறிய உதவும் பிசினஸ் ஹெல்த் ஸ்கேன் எனப்படும் புதிய நிர்வாக வழிமுறையை லீட்ஹை பிசினஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனராக இருப்பவர்  தீனதயாளன். இவர் பிசினஸ்ஹெல்த் ஸ்கேன் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அது குறித்து பார்ப்போம்..
 ஒரு பொருள் உருவாவதற்கும், வடிவமைப்பு பெறுவதற்கும்  பிசினஸ் மாடல் மிக முக்கியமானதாகும். வணிகத்தில் வளர்ச்சி என்பது ஒரு நிலையில் இருந்து மேம்பட்ட இன்னொரு நிலையை அடைவதுதான்.
அவ்வாறு அடைவதற்கு ஒரு வாகனம் தேவை. அதற்கான வாகனம்தான் இந்த பிசினஸ் மாடல். உதாரணமாக சைக்கிள் என்பது ஒரு வாகனம். அது ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கு உதவி செய்யும்.

அதேபோல மோட்டார் சைக்கிள் ஒரு மணி நேரத்தில் 80 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கும், கார் 120 கிலோமீட்டர் தூரத்தை அடைவதற்கும், விமானம் 500 கிலோ மீட்டர் தூரத்தை அடைவதற்கும் உதவி செய்யும். அதாவது ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு இழுத்து செல்லும்.
பிசினஸ் மாடல் என்கிற வாகனமும் அப்படித்தான். தொழிலை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு உயர்வான இடத்திற்கு எடுத்து செல்கிறது.

1994 முதல் 2000 வரை அப்போது சிறிய நிறுவனங்களாக இருந்த தங்கமயில் ஜூவல்லரி, அருண் ஐஸ்கிரீம், சுகுணா பிராய்லர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது மாபெரும் நிறுவனங்களாக வளர்ந்து விட்டன. அன்றைய காலகட்டத்தில் இந்நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்த வளர்ச்சிக்கான தாகம், முயற்சி, புதுமைகளை கற்றுக்கொண்டு உடனடியாக செயல்படுத்தக்கூடிய திறன் போன்றவை இந்நிறுவனங்களின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தன.

தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் அப்போது சிறிய நிறுவனமாக இருந்த போது எங்களை போன்ற நிபுணர்களை அணுகி வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றார்கள். அதன் மூலம் ஒருங்கிணைந்த பிசினஸ் மாடலை உருவாக்கினார்கள்.
இன்றைக்கு அது மாபெரும் நிறுவனமாக உருவாகி உள்ளது. ஸ்ட்ரக்சர், ரீ இன்வெஸ்மென்ட், ஸ்டேட்ரர்ஜி ஆகிய மூன்றும் பிசினஸ் மாடல்களாக சரியாக ஒருங்கிணைக்கப்பட்டன. அதுதான் அந்நிறுவனத்திற்கு வெற்றியை தேடி தந்தது.

எங்களிடம் வரும் தொழில் முனைவோர்களுக்கு ஒரே மாதிரியான ஆலோசனைகளை கொடுத்தாலும் ஒரு சிலர் அவர்களுடைய தொலைநோக்குப் பார்வை,  முயற்சி, உழைப்பு ஆகியவற்றின் மூலமாக மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளார்கள். அதற்கு உதாரணமாக  தங்க மயில் ஜூவல்லரி நிறுவனத்தை கூறலாம்.
வியூகத்தில் மாறுதல் செய்வது பிசினஸ் மாடலில் ஒரு முக்கியமான விசயம். இதற்கு  ஒரு உதாரணம் பார்க்கலாம். இதயம் நல்லெண்ணை நிறுவனம்  வியூகத்தை மாற்றி அமைத்து எத்தகைய சூழ்நிலையிலும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்ட நிறுவனமாகும்.

அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முத்து  இயல்பிலேயே சிறந்த நிர்வாகி. மேலும் அவர் சிறந்த பேச்சாளராகவும், பயிற்சியாளராகவும் திகழ்கிறார். அவரது சொற்பொழிவை கேட்ட பல தொழில் முனைவோர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் இதயம் நிறுவனத்தின் வணிக ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் வணிக சூழலில் நடைபெறும் பல்வேறு விசயங்களை மேலாளர்களிடம் கேட்டறிந்து அதற்கேற்ப அவர் வியூகங்களை  மாற்றிக்கொண்டே இருப்பார்.
பிரச்சனைகள் வரும்போது அவர் ஒரு போதும் சோர்ந்து போவதில்லை. அதற்கான காரணங்களை கண்டறிந்து வியூகங்களை மாற்றி அமைப்பதில் கவனம் செலுத்துவார்.
மாற்றி யோசி என்கிற கோட்பாட்டிற்கிணங்க பல விசயங்களை இதயம் நிறுவனம் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இருக்கிறது. ஆயில் புல்லிங் என்கிற ஒரு அருமையான கான்சப்டை கொண்டு வந்தார்கள். இது நீண்ட கால அடிப்படையில் பயன்தரக்கூடிய ஒரு வெற்றி பார்முலா ஆகும்.

பிசினஸ் மாடலில் மேலும் ஒரு முக்கியமான விசயம், மனிதர்கள் மற்றும் நிறுவனம்.  இதற்கு உதாரணமாக தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தை கூறலாம்.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பணியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு என்பது முக்கியமானது.
சப்ளையர், பணியாளர்கள், தொழில்நுட்பம், ஊடகம் போன்ற  நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்து பங்களிப்பாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்போதுதான் நிறுவனத்தின் வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என்பது  இந்நிறுவனத்தாரின் ஆழமான நம்பிக்கை.
அவர்களுடைய பட்ஜெட்டில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஊழியர்களின் மேம்பாட்டிற்காக எங்களை போன்றோரை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களின் மகிழ்ச்சிக்கு உதவுகிறார்கள்.

இதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியும் உறுதியாகிறது. இவ்வாறு பிசினஸ் மாடல்கள் உருவாவதற்கு உதவி செய்யும் மேலான்மை கருவிதான்  பிசினஸ் ஹெல்த் ஸ்கேன் முறையாகும். இதற்கு பல நுண்ணிய தகவல்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.
160 நிறுவனங்களுக்கு மேல் கடந்த 18 ஆண்டுகளில் நாங்கள் செய்த கன்சல்டன்சி மூலமாக ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு உருவாக்கப்பட்டது தான் பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்.

பின்வரும் நான்குவித தொழில் சூழ்நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு பிசினஸ் ஹெல்த் ஸ்கேன் நன்கு பயனளிக்கும்.
u சில நிறுவனங்கள் சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எப்படி வளர்வது என்பதை     தெரியாமல் இருக்கும்.
u    செல்கின்ற பாதை சரியானதுதானா? இலக்கை நோக்கி செல்கிறேனா? என்ற சந்தேகத்துடன் சிலர் இருப்பார்கள்.
uபிரச்சனைகளை அமைப்பு ரீதியாக எதிர்கொள்வது எப்படி என்பதை தெரியாதவர்களாக சிலர் இருக்கிறார்கள்.
u    முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர் இருப்பார்கள்.
இத்தகைய தொழில் சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு பிசினஸ் ஹெல்த் ஸ்கேன் நன்கு பயனளிக்கும். நிறுவனத்தில் உள்ள   பிரச்சனையை கண்டறிந்து நலிவு வரும் முன் காப்பது தான் பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்  முறையின் அடிப்படை   நோக்கமாகும்.

 மதன்

 

 

Issues: