இந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை

உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியபோதும் இந்தியாவின் பொருளாதாரம் அதனால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. ஓரளவு பாதிப்பு இருந்தது என்றாலும் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பெரிய அளவு பாதிப்பை இந்தியா அடையவில்லை. அதனால் தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் ஆச்சரியத் துடன் பார்க்கின்றன.
ஆசிய அளவில் பொருளா தார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் உள்ள இரண்டு பெரிய நாடுகள் என்றால் அது இந்தி யாவும், சீனாவும் தான்.
ஒரு காலத்தில் ஜப்பான் ஆசிய அளவில் கோலோச்சி கொண்டிருந்தது. 1980&களில் சீனாவில் சந்தை பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர தொடங்கியது. இதனால் சீனா விரைவிலேயே ஜப்பானை முந்த தொடங்கியது. தற்போது இந்தியாவும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி முன்னேறி விட்டது.
எனவே ஆசிய அளவில் இரண்டு பொருளாதார வல்லமை படைத்த நாடுகளாக இந்தியாவும், சீனாவும் திகழ்கின்றன. விரைவில் சீனாவையும் மிஞ்சி இந்தியா ஆசியாவின் நம்பர் 1 பொருளாதார நாடாக திகழும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அதற்கான பல்வேறு சாதகமான அம் சங்கள் இந்தியாவில் நிலவுவதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
சீனா 135 கோடியை மக்கள் தொகையாக கொண்டுள்ளது. இந்தியா 120 கோடி மக்களை கொண்டுள்ளது. எனினும் சீனாவில் 35 வயதிற்குட்பட்டவர் களின் எண்ணிக்கை 70 கோடியாக உள்ளது. இந்தியாவில் இது 65 கோடியாக உள்ளது. விரைவில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவையும் மிஞ்சும்.
இந்தியாவில் ஜனநாயகமும், நீதித்துறையும் சிறப்பான முறையில் இயங்குவதால் முதலீட்டாளர்களின் பார்வை தொடர்ந்து இந்தியாவின் மீது குவிந்து கொண்டு வருகிறது. மனித வள ஆற்றல் இந்தியாவில் சிறப்பாக இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை மிகவும் விரும்புகின்றன.
சிங்கப்பூரில் இயங்கி வரும் சி.எல்.எஸ்.ஏ. என்ற அமைப்பு 2016&ல் ஆசிய அளவில் இந்தியா 7.2 சதவீத வளர்ச்சியையும் சீனா 7.1 சதவீத வளர்ச்சி¬யும் பெரும் என்று கூறியிருகிறது. அதாவது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவையும் மிஞ்சி விடும். மேலும் ஒட்டுமொத்த பொருளாதார பலத்தில் 10 ஆண்டுகளில் சீனாவையும் இந்தியா மிஞ்சி விடும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு பொருளாதார வளர்ச்சிக்காக துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு முதலீடுகள் குவிவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. பங்குச்சந்தையில் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. மேலும் உற்பத்தி துறையிலும், சேவைத்துறையிலும் முதலீடுகள் வரத்தொடங்கி உள்ளன.
இந்தியா, பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான சாத்திய கூறுகளை பெற்று இருப்பது குறித்து பார்த்தோம். எனினும் இந்தியாவில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சனை நிலவுவதால் சில மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன்காரணமாக விவசாய உற்பத்தி வெகுவாக குறைகிறது-.
விவசாயிகள் வறுமை நிலைமைக்கு தள்ளப்பட்டு கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு உள்ளாகின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும் எனில் தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால் இந்தியா முழுவதும் விவசாய நிலங்களுக்கு சீராக தண்ணீர் கிடைக்கும். இது விவசாய உற்பத்தியை பெருக்கி உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடையக்கூடிய நிலையை உருவாக்கும்.
மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில் 2&ம் இடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து இந்தியா பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது என்பதை மேலேயே பார்த்தோம். எனினும் உண்மையான வளர்ச்சி என்பது ஓட்டு மொத்த சமூக பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்கவேண்டும்.
வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பது, அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்தல், பேறுகால தாய்மார்களின் நலனை உயர்த்துதல், உயிர்கொல்லி நோய்களை ஒழித்தல், சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்தல், பன்னாட்டு உறவுகளை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.
ஒரு பக்கம் வருவாய் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் இந்தியர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். மறுபக்கம் மனிதனின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. உண்மையான ஏழைகளுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதில்லை. ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டுக்களை விலைக்கு வாங்கும் கீழ்த்தரமான அரசியல் நடைமுறை ஒழிக்கப்படவேண்டும். அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மனித வளத்தை முழுமையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுயசார்புடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக அரசு முனைப்பு காட்ட வேண்டும். அப்போது தான் இந்தியா அடைந்து வரும் பொளாதார வளர்ச்சிக்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.

Issues: