August 2015

பணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்,  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய, சொத்து ஜாமீன் கொடுக்க இயலாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் விதமாக, தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.  

வல்லரசுக் கனவை விதைத்துவிட்டு விண்ணுக்கு சென்றுவிட்ட ஏவுகணை நாயகன்!

இந்தியக் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தவர்களில், மக்களின் இதயங்களை கவர்ந்தவர் யார் என்ற கேள்வியை  முன்வைத்தால், அதற்கான ஒரே பதில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற பெயராகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவரது  செயல்பாடுகள் அவரது பதவிக்காலத்தின் போது இருந்தன.  
உயர் பதவிகளில் இருப்பவர்கள் அதிகார மட்டத்திலும், வெளிநாட்டுத் தலைவர்களின் மத்தியிலும் வளைய வருபவர்களாகவே இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்து மக்கள் சேவகராக வலம் வந்தவர் அவர்.

அழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்

ஒரு காலத்தில் பணக்காரப் பெண்கள் மட்டும்தான் பியூட்டி பார்லர்களுக்குச் செல்வதில் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அதிலும் நகரத்துப் பெண்கள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். 
 
தற்பொழுது கிராமத்துப் பெண்களும் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறையோடு செயல்படுகிறார்கள்.
எனவேதான்  அழகுக் கலைப் பயிற்சி பெற்றவர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கேற்ற சிறந்த தொழில் இது.

எப்போதும் பாசிட்டிவாக இருங்கள்...

தான் ஓர் அறிவாளி என்று கர்வம் கொண்டு ஒருவன் செயல்பட்டு விட்டால் மட்டும் வாழ்க்கையில் ஜெயித்துவிட முடியாது. அப்படி ஒருவன் ஜெயித்ததற்கான சான்று எதுவும் வரலாற்றில் கிடையாது. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது தான் தன்னம்பிக்கை. 
“உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்“ என்பது வெளிநாட்டு அறிஞர் ஒருவரின் கூற்று. தன்னம்பிக்கை உள்ளவன் இந்தக் கூற்றை வாழ்க்கையில் கடைபிடிக்கிறான். அறிவாளியோ இந்தக் கூற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்கிறான்.

விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்கள்... பிரச்சனை தீர என்ன செய்யலாம்?

இந்தியா ஒரு விவசாய நாடு என்பதால் தனது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோத னையை இந்தியா நடத்திய போது, இந்தியா மீது பொருளாதாரத் தடையை சில நாடுகள் விதித்தன. எனினும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும்  வலிமை இருந்ததால் அத்தடையைக் கண்டு இந்தியா அஞ்சத்தேவையில்லா மல் போனது குறிப்பிடத்தக்கது.

கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’

மிகவும் வறுமை நிலையிலுள்ள வர்களின் வறுமை நிலையை அகற்றுவதற்கு ஜெயலலிதாவின்  முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2005ம் ஆண்டு, புதுவாழ்வு திட்டம் என்ற ஒரு திட்டம் துவக்கப்பட்டது. இது உலக வங்கியின் நிதி உதவியுடன் அப்போது துவக்கப் பட்டது. இத்திட்டம் தமிழகத்தின் 120 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்பட்டது.  
அதை தொடர்ந்து வறுமை நிலையிலுள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழகத்தின் ஏனைய 265 ஊராட்சி ஒன்றியங்களிலும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2012ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

பூச்செடி வளர்ப்பில் வருமானம்...

பலருக்கும் பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பூச்செடிகளை மட்டும் விற்பனை செய்வதற்கு சிலர் பூச்செடிகளை வளர்க்கின்றனர். இன்னும் சிலர் பூக்களை மட்டும் விற்பனை செய்வதற்கு பூச்செடிகளை வளர்க்கின்றனர். இது ஒரு நல்ல தொழில் எனலாம்.    

கிராமபுறங்களில் அதிக அளவு திறந்தவெளி இடங்கள் இருப்பதால் அம்மக்கள் அதிக பூச்செடிகளை வளர்த்து  பூக்களை விற்கிறார்கள்.  குறைந்த அளவு நிலம் உள்ளவர்கள் கூட பூச்செடிகளை வளர்த்து பூக்களை விற்பனை செய்து இலாபம் அடையலாம்.

சாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி?

கடந்த 2008ல் தொடங்கிய உலக பொருளாதார நெருக்கடி இன்று வரை நீடித்து வருவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த நெருக்கடியில் இருந்து பல நாடுகள் இன்னும் மீளவில்லை.  

அவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்

பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியம். தனி நபர் கடனுக்கான வட்டிவிகிதம் மிகவும் அதிகம். இதற்கு வங்கிகள் கூறும் காரணம், அது பாதுகாப்பற்ற கடனாம். 

வருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்

வண்ண மீன் வளர்ப்புத் தொழில் சென்னையில் மிகவும் பிரபலமாக உள்ளது. சென்னை கொளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளான விநாயகபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். கடந்தநான்கு  ஆண்டுகளில் இத்தொழில் மிகவும் வளர்ந்திருக்கிறது.
 
வண்ணமீன் வளர்ப்பில் மிகவும் பெயர் பெற்ற நாடு சிங்கப்பூர். மேலும் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இத்தொழில் மிகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் கொல்கத்தாவில் வண்ணமீன் வளர்ப்புத் தொழில் நன்றாக நடபெற்று வந்தது.

Pages