சம்பாதிப்பதை சேமிப்பதற்கான வழிமுறைகள்!

வரவு எட்டணா.. செலவு பத்தணா.. என்று கண்ணதாசன் 50 ஆண்டுகளுக்கு முன்னரே பாடி சென்று விட்டார். பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய கால கட்டத்திலும் அதே நிலமைதான் இன்னும் தொடர்கிறது.
பெரும்பாலானோர் வரவைவிட செலவு அதிகமாக செய்கின்றனர். பிறகு கடனாளியாகி தத்தளிக்கின்றனர். எனவே செலவை குறைப்பது அவசியம். இந்த செலவை குறைப்பதற்கு சில விஷயங்களை கடைபிடிப்பது அவசியம். அவை குறித்து பார்ப்போம்:
சம்பளம் வாங்கும் ஒரு நபர் மாத தொடக்கத்தில் கைக்கு சம்பளம் கிடைத்தவுடன் சேமிப்பு தொகையை முதலில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
சேமிப்புக்கு முன்னுரிமை கொடுத்து மீதமுள்ள தொகையில் செலவுகளை திட்டமிடுவது நல்லது. சம்பளம் வாங்குபவரும் சரி, சுயதொழில் செய்து சம்பாதிப்பவரும் சரி.. வருகிற வருமானத்தில் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது.
மொத்த வருமானத் தில் வாடகை, மளிகை சாமான், கல்வி கட்டணம் ஆகியவற்றிற் கான செலவை திட்டமிடுவது போல சேமிப்புக்கும் திட்ட மிட்டு அதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கிடைக்கும் வருமானத்தில் சேமிப்புக்கு போக அத்தியாவசிய செலவுகளுக்கு முதலில் திட்டமிட வேண்டும். பொழுதுபோக்குக்கான செலவுகளை முதலிலேயே திட்டமிடுவது சரியாகாது. அவசிய செலவுகள் போக மீதமுள்ள தொகையை மட்டுமே பொழுதுபோக்குக்கு செலவிட வேண்டும்.
சம்பளம் வந்தவுடன் பட்ஜெட் போட வேண்டும். அவ்வாறு பட்ஜெட் போடும்போது கடந்த மாத பட்ஜெட்டையும் வைத்துக்கொண்டு ஒப்புநோக்கி திட்டமிட வேண்டும்.
அப்போதுதான் கடந்த மாதத்திற்கும், நடக்கிற மாதத்திற்கும் இடையே எவ்வளவு தொகை வேறுபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
மாத பட்ஜெட் போட்டு செலவு செய்வதோடு அன்றாடம் செய்யும் செலவுகளையும் எழுதி வைக்க வேண்டும். பட்ஜெட்டைவிட அதிகம் செலவானால் அதை குறைப்பதற்கு இந்த நடைமுறை உதவும்.
என்ன வாங்கப் போகி றோம் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு ஷாப் பிங் செல் லுங்கள். அதற்கான பணத்தை மட்டும் எடுத்து செல்லுங்கள். அதிகமான பணத்தை எடுத்து சென்றால் தேவையற்ற பொருட் களை வாங்கும் எண்ணம் ஏற்படலாம்.
கிரடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது சிறந்தது. இதன்மூலம் தேவையில்லாத பொருட்கள் வாங்குவதை தவிர்க்க முடியும். சர்வீஸ் கட்டணம், வட்டி போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.
மேற்சொன்ன வழிமுறைகளை கடைபிடித்தால் நிச்சயம் உங்களது சேமிப்பு தொகை அதிகரிக்கும். அந்த சேமிப்பு தொகையை கொண்டு எதிர்கால வாழ்வுக்கு திட்டமிட முடியும்.

Issues: