6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்!

கார்பரேட் நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியைப்பற்றி நாம் இன்றைக்கு வியந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.
எவ்வளவுதான் நாம் வியந்து பேசினாலும், இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறு சிறு தொழில் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், கார்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவே.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு 1954ல் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம்’ என்ற அமைப்பைத் தொடங்கியது.
சிறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அப்போதைய நேரு அரசு, இந்த அமைப்பை தொடங்கியது.
மத்திய குறு சிறு தொழில்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு, தொழில்முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சிகள், திறன் வளர்ப்பு பயிற்சி, நிறுவன பதிவு, வாங்குபவர் விற்பவர் கூட்டங்கள் ஒருங்கிணைப்பு, தொழில்துறை சார்ந்த அறிக்கைகள், சந்தை உதவி, கருத்தரங்குகள், தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயரிப்பில் உதவி, பொதுவான பயிற்சி வகுப்புகள் போன்ற பல நிலைகளில் தொழில் முனை வோர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான மண்டல அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் இதன் மண்டல அலுவலகம் உள்ளது.
காலத்துக்கு ஏற்ற நவீன தொழில் பயிற்சிகளை இந்த நிறுவனம் அளித்து வருவது, தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. குறிப்பாக உற்பத்தி துறை சார்ந்த தொழில்கள் மட்டுமில்லாமல் சேவைத்துறை சார்ந்த பயிற்சிகளையும் அளித்து வருகிறது.
பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல தொழில் வாய்ப்பு களையும் இந்த நிறுவனம் அளிக்கிறது.
சர்வதேச அளவில் இயந்திரங்கள் வாங்குவதற்கான முன் தயாரிப்பு உதவிகள், தொழில்முனைவோரின் கடன் வாங்கும் தன்மைக்கு ஏற்ப கடனுதவிக்கு ஏற்பாடு செய்தல், புதிய தொழில் நிறுவனத்தை தொடங்குவது போன்ற ஏற்பாடுகளையும் செய்கிறது.
2006ம் ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டத்தின்படி (Micro,Small&Medium Enterprise Developement Act 2006) குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை:
1.உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் (Manufacturing Enterprises)
2.சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service Enterprises)
இயந்திரங்கள் (Machinery) மற்றும் உபகரணங் களில்(Equipment) செய்யப் படும் முதலீடு, மூலதனம் இவற்றை பொறுத்தே குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரைய றுக்கப் பட்டுள்ளன. நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
ஒரு தொழில், சிறுதொழில் என மாநில அரசால் அங்கீகரிக் கப்பட வேண்டுமெனில் அத்தொழில் உற்பத் திக்கான இயந்திரங் களின் மொத்த மதிப்பு ரூ5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற வரையறை 1960-ல் ஏற்படுத்தப் பட்டது.
பின்னர் படிப்படியாக உயர்ந்த இந்த வரையறை 2006-ல் ரூ 5 கோடி என ஆகியது. குறுந்தொழிலுக்கான வரையறை ரூ.25 லட்சம் என்றானது. நடுத்தரத் தொழிலுக்கான வரையறை ரூ 10 கோடி என்றானது. முதலீட்டிற்கேற்ப சலுகைகளும் மானியங்களும் அரசால் வழங்கப் படுகின்றன.
வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் உற்பத்தியை பெருக்குதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வருவது குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களாகும்.
இந்திய அளவில் 261 லட்சம் நிறுவனங்கள் உள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. இந் நிறுவனங்கள் சுமார் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநில பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன.
கடந்த ஆண்டு நிலவரப்படி, 8.44 இலட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. சுமார் 60 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வரும் இந்நிறுவனங்கள் 8000-க்கும் மேற்பட்ட பொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
இந்திய அளவில் தமிழகத்தில்தான் குறு சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
வெளிமாநிலங் களைச் சேர்ந்தவர் களுக்கும் வேலை வாய்ப்பை வாரி வழங்கும் தளமாக தமிழகம் திகழ்கிறது என்றால் அதற்கு காரணம், குறு சிறு தொழில் நிறுவனங் கள்தான். தமிழக அரசும் குறு சிறு தொழில் நிறுவனங் களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வந்த போதும் இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது முக்கியமான அம்சம். இதற்கு காரணம் புதுமை புனைதல், தகவமைப்பு தன்மை போன்றவையே.
தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில், தொழில் வணிக ஆணையரகம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (ஷிமிஞிசிளி) தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனம் (ஜிகிழிஷிமி) தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (ணிஞிமி) ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 12 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழக அரசு ரூ.946 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாநில அரசின் ஒத்துழைப்பு சிறு, குறு நிறுவனங்களுக்கு தாரளமாய் கிடைத்து வருகிறது. எனினும், இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்பிரச்னைகளை களைந்து தொழில் துறையை இன்னும் மேம்பாடு அடைய செய்வது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

Issues: