ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு ஏற்படுத்தும் சாதகங்கள்.

.இரண்டு வருடங்களுக்கு பிறகு, வங்கிகளுக்கு அளிக்கும் கடன் விகிதமான ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு அறிவித்த உடனேயே சென்செக்ஸ் குறியீட்டு எண் அதிகரித்தது.
இந்த வட்டி விகித குறைப்பு, பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்க செய்யும் என்ற எண்ணத்தின் காரணமாக பங்குகள் வாங்குவது அதிகரித்தது. இது சென்செக்ஸ் குறியீட்டு எண் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது.
இதுபோல பல்வேறு நன்மைகளை இந்த வட்டி விகித குறைப்பு நமக்கும் அளிக்கும். அது என்னென்ன என்பதை பார்போம்:
ஈ.எம்.ஐ வீட்டு கடன் விகிதத்தில் 0.25% குறைந்தால் ரூ.50 லட்சம் கடன் தொகைக்கு, 20 வருட கால கட்டத்திற்கு, மாத தவணையில் ரூ.842- குறையும்.
வட்டி விகிதங்கள் குறைவதால் நிறுவனங்கள் வலுவடையும். மேலும் வங்கிகளின் கடன்பத்திரத்தின் மதிப்பு உயரும். இது வங்கிகளுக்கு லாபத்தை ஏற்படுத்தி தரும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களுக்கு இனி குறைவான வட்டியில் நிதி கிடைக்கும். இதனால் வங்கிகள் எதிர்பார்த்த கடன் வழங்கும் தொகையின் அளவு அதிகரிக்கும்.
பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் நிறுவனங்கள் தங்களின் பங்குகள் மூலம் நிதி திரட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு நிறுவன பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
கடன்கள் மக்களுக்கு சுலபமாக கிடைக்கும். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் என வங்கிகள் கருதுகின்றன.

Issues: