July 2015

போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்

உலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.

அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு,  இன்னும் உலகின்  முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...

அமெரிக்காவில் சாமானிய மக்களும் பலன் பெறும் வகையில் அதிபர் ஒபாமா,   இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, சுகாதார காப்பீட்டு திட்டத்தை   கொண்டு வந்திருந்தார். அமெரிக்காவில் இது ஒபாமா கேர் என அழைக்கப்படுகிறது. இதற்காக தனிச்சட்டமும் கொண்டு வந்திருந்தார் ஒபாமா.

இந்த சட்டம், அரசாங்கத்தின் சுகாதார காப்பீட்டு திட்டங்களிலோ அல்லது பணி புரியும் நிறுவனங்கள் செயல்படுத்துகிற இன்சூரன்ஸ் திட்டங்களிலோ  பலன் பெறாத தனிநபர்கள், குறைந்த செலவிலான அரசின் புதிய காப்பீட்டுத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறது.

தடா ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைப்பிரிவுகள்...

சர்வதேச அளவில் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும், ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம் சார்பாக, ஆந்திர மாநிலம் தடாவில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு அருகாமையில் ‘ஆல்வின் தடா கோல்டன் சிட்டி’ என்னும் பெயரில் மனைப்பிரிவுகள் அமைய உள்ளது, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறுகிறார் இந்நிறுவனத்தின் சேர்மன், லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  

இகாமர்சிலிருந்து எம் காமர்சுக்கு மாறுவதில் நிறுவனங்கள் ஆர்வம்

இந்தியாவில் இகாமர்ஸ் வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பல முன்னணி நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. தற்போது வரை இவ்வர்த்தகத்தில் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

நூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....

மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பானதாக ஆகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான ரசாயன சேர்க்கை இருந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
 
இதன் காரணமாக அனைத்து நூடுல்ஸ் நிறுவனங்களும் தரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. மக்களும் தரமான  நூடுல்சையே தேடி வாங்கத் தொடங்கி விட்டனர்.
நூடுல்சை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் விருப்பம். அதனால்தான்  நூடுல்ஸ் உற்பத்தியும்  விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர்கள் ரூ12ஆயிரம் கோடி முதலீடு கர்நாடக மக்கள் வியப்பு!

கர்நாடக மாநிலம்  சாம்ராஜ்நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1,595 ஏக்கர் தொழிற்பூங்காவில் தமிழகத்தை  சேர்ந்த முதலீட்டாளர்கள் சுமார் 12ஆயிரம்  கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர் என்கிற செய்தி கர்நாடக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உரிய காலத்தில் தண்ணீர் தராமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவில், தமிழர்கள் முதலீடு செய்திருப்பது அம்மாநில மக்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்?
 
இத்தொழிற்பூங்காவை கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடந்த ஜுன் மாதம் திறந்து வைத்தபோது  ‘கர்நாடகா - தமிழ்நாடு இடையே அரசியல் ரீதியாக துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்து உள்ளன.
 

பயிர்க்காப்பீடு செய்ய முன் வராத விவசாயிகள்...காரணம் என்ன?

இந்திய மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி  செய்வதுடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இந்த விவசாயத்தை பாதிக்கக்கூடிய காரணிகளாக திகழ்வது பருவ மாற்றமும் விலை மாற்றமும் ஆகும்.
  மழை பொழிந்து விளைச்சல் அதிகமானால் பொதுமக்களுக்கு நன்மையாக இருக்கிறது. அதேசமயத்தில் அது பெரும்பாலும்  விவசாயிகளுக்கு நன்மையாக இருப்பதில்லை.
குறிப்பிட்ட பொருள் சந்தையில் குவிந்தால் அப்பொருள் மிக குறைவான விலைக்கே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

நாடு மேலும் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்க உதவுமா ஜி.எஸ்.டி முறை?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வழிவகுக்கும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை 2016 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான அரசியல் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 352 வாக்குகள் அளிக்கப்பட்டது. எதிராக 37 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டது.
விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று  காங்கிரஸ் கோரியிருந்தது.

ஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்

நம் நாட்டிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் ஏற்றுமதியின் பங்கு முக்கியமானது. எனவே தான்  ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் அளித்து அரசு அவர்களை ஊக்குவித்து வருகிறது.
 
ஏற்றுமதி வளர்ச்சி வாரியங்கள் மூலம் பல்வேறு தகவல்கள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு, இந்தியா பிற நாடுகளுடன் கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றியும், அவற்றால் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் சரிவர தெரிவதில்லை.

பீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்

பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிற  முக்கியமான காய்கறிகளுள் ஒன்று பீட்ரூட். இது குளிர்பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டு வரை இந்த காய்கறி இந்தியாவுக்கு அறிமுகமாகவில்லை. அந்த நூற்றாண்டு தொடக்கத்தில்தான் ஆங்கிலேயர்களால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

Pages