நலிவடைந்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்

கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றாலே மிகவும் வளமாகத்தான் இருக்கும் என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த எண்ணத்தை நாம் மாற்றிக்கொள்வது நல்லது.
பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நலிவடைந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனம் நலிவடைந்த நிலைக்குச் சென்றிருக்கிறது என்பதற்கான வரையறை என்ன?

கம்பெனிகள் சட்டத் தின்படி, கடன்களை மூன்று தவணைகளில் திருப்பி செலுத்தத் தவறிய கம்பெனிகள், நலிவடைந்த கம்பெனிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்றன. இது தவிர தொடர்ந்து நட்டத்தை தந்து கொண்டிருக்கும் கம்பெனிகள் தமது பொறுப்புகளை நிறைவேற்ற இயலா நிலைக்கு தள்ளப்படுவதை நலிவு என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு நிறுவனம் அல்லது கம்பெனி நலிவடைவதற்கு பல காரணங்கள் உண்டு.

நிறுவன ரீதியான காரணங்கள்
நிர்வாக திறமையின்மை மேலோங்கி இருக்கும் நிர்வாகத்தில் முறைகேடுகளும் மோசடிகளும் நிறைந்திருக்கும். நிர்வாக முரண்பாடுகள் இருக்கும். நடப்பு செலவுக்கான நிதி ஆதாரம் போதுமானதாக இருக்காது. தொழிலாளர்களை பயன்படுத்தும் திறனில் குறைபாடு இருக்கும்.

புறரீதியான காரணங்கள்
பொருளாதார மந்த நிலை, தொழில் போட்டிகள், சந்தை மாற்றங்கள், வாராக் கடன்கள், தவறான முதலீடுகள், கூடுதல் செலவினங்கள் போன்றவை.
காரணங்கள் என்னவாக இருந்தாலும் ஒரு நிறுவனம் நலிவடைந்தால் பாதிக்கப்படுவது அதன் உரிமையாளர்கள் மட்டுமல்ல. அதைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவருமே பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவேதான் நலிவடைந்த கம்பெனிகளை மீண்டும் உய்வடையச் செய்ய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க விரும்புகிறது.

நலிவடைந்த கம்பெனி களுக்கென்றே 1985ல் அரசு சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது இதற்காக தனி போர்டு உள்ளது. நலிவடைந்த கம்பெனிகள் தமது நிலை குறித்து நேரடியாக ஆய்வு நடத்தி தேவையான உதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளும். மாறாக அக்கம்பெனியின் நிலையை உயர்த்த முடியாது என்று போர்டு கருதினால் அந்தக் கம்பெனியை மூடிவிட ஆணை பிறப்பிக்கும்.

உதவி பெற தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மூலதன கட்டமைப்பை மாற்றியமைத்தல், நிதி ஆதாரம் அளித்தல், தொழில்நுட்பத்தை நவீனபடுத்துதல், நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வருதல், கடன் தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட உதவிகள் கிடைக்கப் பெறலாம். எனவே நலிவடைந்த நிறுவனங்கள் இநத் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ராஜாராம்

 

Issues: