வரி

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா?

மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு விரும்புகிறது. இதற்கு வழிவகை செய்யும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த ஏப்ரல் 24-ந்தேதி தாக்கல் செய்தார்..
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன் மீது கலால் வரி, சேவை வரி, அந்தப் பொருட்களை வர்த்தகத்திற்காக மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் போது நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி என பல வரிகள் விதிக்கப்படுகிறது.