ஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா?

இந்தியாவில் பெரிய நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் இவற்றை விட தனி நபர் நடத்தும் தொழில்கள் தான் அதிகம் என்றால் அதுமிகையல்ல. தனி நபர்கள் நிறுவனத்தை பதிவு செய்யாமலேயே தொழில்கள் செய்கின்றனர். அதே சமயத்தில் பதிவு செய்து கொண்டு அவர்கள் தொழில் செய்தால் அரசு வழங்கும் சலுகைகளையும் பாதுகாப்பையும் பெற முடியும்.
நிறுவனம் என்கிற அடை யாளம் தொழில் முனைவோரின் கடன் வாங்கும் மதிப்பை உயர்த் தும். கடன் கொடுக் கும் வங்கிகள் தொழில் முனை வோரின் நிறுவன மதிப்பைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் ஒரு தொழிலைக்கூட நிறுவனமாக பதிவு செய்துகொள்ள முடியும்.
தனிநபரை உரிமையாளராக கொண்ட நிறுவனம் நடத்தும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் தொழிலுக்காக வாங்கிய கடன்களுக்கு அவர் தனது சொந்த சொத்துகளையும் இழக்க நேரிடும்.
ஆனால் நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டால் தொழிலில் ஏற்படும் நஷ்டங்களுக்கு தொழில்முனைவோர் தனது சொந்த சொத்துக்களை இழக்க வேண்டிய தில்லை.
தனிநபரை உரிமையாளராகக் கொண்டு இயங்கும்போது, நிறுவன கணக்கு மற்றும் வரவு செலவுகளை தணிக்கை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு ஏற்ப வரவு செலவுகளைப் பார்த்தால் போதும்.
தனி உரிமையாளர் அவரது போக்கிற்கு தொழிலை நடத்தலாம். கூட் டம் நடத்த தேவை யில்லை. ஆனால் நிறுவனங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயக்குநர் கூட்டம் நடத்தி, அதன் அறிக்கை யை பதிவு செய்ய வேண்டும்.
தனி உரிமை யாளர் அவருக்கு பிறகு அவரது குடும்ப வாரிசு அல்லது அவர் விரும்பும் நபர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். ஒரு நபர் நிறுவனத்திற்கு லாபத்தை அடிப்டையாக கொண்டு வரி விதிக்கப் படுகிறது.
உரிமையாளராக இருந்து தொழிலை நடத்துவதை விட பதிவு செய்து நிறுவனமாக தொழிலை நடத்துவது பாதுகாப்பானதாக அமையும். மேலும் தொழிலை அபிவிருத்தி செய்யவும் முடியும்.

Issues: