இயற்கை விவசாயத்தில் மகசூலை அதிகம் பெற முடியுமா?

இயற்கைப் விவசாயத்தை பின்பற்றுவோருக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதில்லை. குறைந்த தண்ணீரை கொண்டே விவசாயம் செய்ய முடியும் என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. இதனால் செலவு குறைகிறது.
உண்மை இவ்வாறு இருக்க உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு ஆதரவாக இருப்போர் இயற்கை விவசாயம் அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ளும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் உற்பத்தியும் அதிகரிக்காது என்று கூறுகின்றனர். இந்த கூற்று முற்றிலும் தவறானது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நமது முன்னோர்கள் இயற்கை விவசாயத்தைதான் செய்து வந்தனர். 60களுக்கு பிறகுதான் பசுமை புரட்சி என்ற பெயரில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாடு அதிகரித்தன.
இவற்றின் மூலம் விளையும் உணவுகளை உண்போருக்கு ஆரோக்கிய கேடு உண்டாவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனாலும் நாம் இன்னும் இயற்கை விவசாயத்திற்கு மாறாமல் இருக்கிறோம். மகசூல் குறைந்து லாபம் குறையும் என்ற அச்சத்தின் காரணமாக விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறாமல் இருக்கின்றனர். உண்மையில் இந்த அச்சம் தேவையற்றது.
இருக்கும் வளங்களை மறு சுழற்சி செய்து, மண் வளத்தைப் பாதுகாத்து பூச்சி நோய் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். இதனால் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பஞ்ச கவ்யா என்கிற இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைச்சலை அதிகப்படுத்த முடியும்.
இந்த உண்மைகளை விவசாயிகள் புரிந்து கொண்டால் நிச்சயம் இயற்கை விவசாயத்திற்கு மாறுவர். பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் சுமார் 30 சதவீத பூச்சிகளே அழிக்கப்படுகிறது. மீதமுள்ள பூச்சிகள் அப்படியே இருப்பதோடு அடிக்கப்பட்ட மருந்துகள் காற்றில் கலந்து விடுகின்றன. இவற்றை சுவாசிப்பவர்களுக்கு ஆரோக்கிய கேடு உண்டாகிறது.
எனவே இயற்கை விவசாயமே சிறந்தது என்பதில் ஐயமில்லை. அரசும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Issues: