போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்

உலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.

அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு,  இன்னும் உலகின்  முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 1200 லட்சம் கோடியாகும். அதனால்தான் அந்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.
அந்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் அன்பாக பழகுகின்றனர். குறிப்பாக இந்தியர்களிடம் மிகுந்த அன்பு காட்டுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்தியா மீது எப்போதும் மிகுந்த பாசம் உண்டு.

அவர் காந்தியின் கொள்கைகளை போற்றுபவர். இந்தியாவை அமெரிக்கா எப்போதும் நட்பு நாடாகவே பாவிக்கிறது.
அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை மிகவும் போற்றுதலுக் குரியது. அரசு ரீதியான அலுவலகப் பணிகளில் தாமதம் என்பதையே அங்கு காணமுடியாது.  அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறுகின்றன.
 

லஞ்ச லாவண்யம் கிடையாது. அனைத்தும் வெளிப்படையான முறையில் நடக்கிறது.  மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை இவற்றுக்கு அந்நாட்டு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
அனைத்து மக்களுக்கும் அரசு சமூக பாதுகாப்பு அளிக்கிறது. அனைத்து துறைகளிலும் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இதனால் உற்பத்தி மிக அதிக அளவில் நடக்கிறது.
அதிகமான உற்பத்தி, குறைவான ஆட்கள் மூலமே கிடைக்கிறது. அந்நாட்டு டாலர் மூலமாகதான் உலகம் முழுவதும் வர்த்தகம் நடைபெறுகிறது.

இது அந்நாட்டிற்கு கிடைத்த மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும். தனி நபர் வருமானம் அங்கு மிக அதிக அளவில் உள்ளது.
அதனால்தான் சாதாரண தொழிலாளிகூட கார், சொந்த வீடு, ஆடம்பர பொருட்கள் இவற்றுக்கு சொந்தகாரராக இருக்கிறார். இத்தகைய சிறப்பம் சங்களால்தான் உலகின் அனைத்து தரப்பினரையும் ஈர்க்க கூடிய நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

Issues: