தொழிலாளர்களின் சம்பள வரம்பை உயர்த்தும் மத்திய அரசின் திட்டம்நன்மைபயக்குமா?

இந்தியாவை பொறுத்தவரை அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிக அளவில் உள்ளது. அமைப்பு சார்ந்த தொழி லாளர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
அத்தகைய அமைப்பு சார்ந்த தொழிலாளர் களின் உரிமைச் சட்டங்களை கூட தளர்த்துவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மத்திய அரசின் மீது அதிருப்தி மன நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் அதிருப்தியை ஓரளவாவது போக்குவதற்கு சில நடவடிக்கை களையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் தொழிலாளர் மாநில காப்பீடு நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) சலுகையைப் பெற ஊழியர்களின் சம்பள வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் கூடு தல் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் மருத் துவ சிகிச்சையை செலவின்றி பெற முடியும்.
இஎஸ்ஐசி நிறுவனம் பல்வேறு மேம்பட்ட சேவைகளை அளிப்பதற்காக சில வழிமுறைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் இஎஸ்ஐ சலுகைகளைப் பெறுவதற்காக சம்பள வரம்பை உயர்த்துவதும் அந்த வழிமுறைகளில் ஒன்று. தற்போதைய நிலவரப்படி 1.75 கோடி தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். முறைசார்ந்த தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 2.89 கோடியாகும். இவர்களில் இஎஸ்ஐ-யில் பதிவு செய்துள்ள பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 60 சதவீதம் மட்டுமே.
இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக தான் சம்பள வரம்பை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இன்னும் ஏராளமான தொழிலாளர்கள் பயன்பெற வாய்ப்பு உண்டு.
புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பல்வேறு நோய்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற முடியும்.
நோய்க்கு ஆளானவர்கள் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் கூட சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Issues: