மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதில் மக்களின் ஆர்வம் அதிகரிக்க காரணம் என்ன?

மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீட்டு பணம் பெரும்பாலும் வங்கிப் பங்குகளிலேயே முதலீடு செய்யப்படுகிறது. தற்போது சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்டுகள் முதலீடு செய்திருக்கின்றன.
மக்கள் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மியூச்சுவல் பண்டுகளை வெளியிடும் நிறுவனங்கள் மிகவும் நிபுணுவத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால்தான் மக்கள் இந்த பண்டுகளில் முதலீடு செய்கின்றனர். அந்நிறுவனங்கள் மியூச்சுவல் பண்டுகள் மூலமாக பெற்ற பணத்தை தீவிரமாக ஆய்வு செய்து லாபம் தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்து கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன.
மக்களே நேரடியாக பங்குகளை முதலீடு செய்யலாமே என்று நாம் கேட்கலாம். அதில் நிறைய ரிஸ்க்குகள் உள்ளன. ஷேர் மார்க்கெட் நிலவரத்தை தீவிரமாக அடிக்கடி அலச வேண்டி இருப்பதால் மக்கள் குழம்பிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் லாபம் தராத பங்கு களில் முதலீடு செய்து தங்களது பணத்தை இழக்கின்றனர். ஆனால் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் பங்குகளில் செய்யும் முதலீடு பெரும்பாலும் லாபம் தருபவையாகவே இருக்கிறது.
மக்களுக்கும் மூளைச் சுமை இல்லை. செய்த முதலீட்டிற்கு நியாயமான லாபம் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு அம்சங்களால்தான் மக்கள் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

Issues: