மருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு
மருத்துவ செலவுகள் அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில் அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு குடும்பமும் தத்தளிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு தீர்வாக அமைவதுதான் மருத்துவ காப்பீடு.
ஒரு வகையில் இந்த மருத்துவ காப்பீடு என்பது சேமிப்பு என்று சொல்லலாம். மருத்துவ செலவுகளுக்கு என தனியாக பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவு. இதன் மூலம் குறைந்த செலவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியும்.
இந்த மருத்துவ காப்பீடு 2 வகைகளில் கிடைக்கிறது. அவை தனிநபர் மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப மருத்துவ காப்பீடு.
திருமணத்துக்கு முன்பு தனிநபர் காப்பீடு எடுத்தி ருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந் தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக அதாவது குடும்ப காப்பீடாக மாற்றிக்கொள்ளலாம்.
வயதான பெற்றோர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களுக்கு புளோட்டர் பாலிசியை விட தனிநபர் பாலிசியே சிறந்தது. இந்த பாலிசி 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை அனுமதிக்கப்படுகிறது.
நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவ காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும்.பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்காக பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப க்ளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் காப்பீட்டு நிறுவனங்களால் கொடுக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையிலிருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள்.
புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை க்ளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் க்ளைம் செய்து கொள்ளலாம்.
எனவே ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். எல்லா நேரங்களிலும் நம்மிடம் பணம் இருக்கும் என்று சொல்ல முடியாது. அச்சயமங்களில் எதிர்பாராத விதமாக நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகி விட்டால் கடன்வாங்க நேரிடும்.
கடன் கிடைக்காத நிலையில் சிகிச்சையை மேற்கொள்ள இயலாது.