நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு!

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும், உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதலீட்டாளர்களில் பலர்   நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில்  தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இங்கு மேம்படுத்தப்பட்டு வருவது தொழில் நிறுவனங்களை வெகுவாக கவர்ந்துளது.
இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் துவங்கினால் முதல் 5 ஆண்டுகளுக்கு வருமான வரிச்சலுகை கிடைக்கிறது. சுங்கம், வணிகவரி, சேவைவரி உள்ளிட்ட வரிகளை செலுத்தத் தேவையில்லை. அதற்கடுத்த 5 ஆண்டுகளுக்கு 50 சதவீத வருமான வரி மட்டும் செலுத்தினால் போதும் என்பன போன்ற அம்சங்கள் முதலீட்டாளர்களை கவர்வதற்கு முக்கி காரணங்களாக அமைந்துள்ளன.

60 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி துறைமுகம், 175 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் மற்றும் மதுரை விமான நிலையங்கள், 4 கி.மீ தொலைவில் ரயில்நிலையம், தேசிய நெடுஞ்சாலை-7 என தடையற்ற சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற வசதிகள் நிறைந்துள்ளதால், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்றுமதி தொழிலுக்கு சிறந்த இடமாக அமையும்.
அதனால்தான் மத்திய அரசும், மாநில அரசும் இந்த பொருளாதார மண்டலத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. பிரதமரின் மேக்இன் இந்தியா திட்டத்தில் இந்த மண்டலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும்,   ஏஎம்ஆர்எல் என்ற தனி£ர் குழுமமும் இணைந்து உருவாக்கி வரும் இச்சிறப்பு பொருளதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு, மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், பொருள் போக்குவரத்து உள்ளிட்டவை தொடர்பான தொழில்கள் தொடங்கப்பட உள்ளன.
இங்கு தொழில் தொடங்க வெளிநாட்டு வாழ் தமிழர்களும் மிகவும் ஆர்வம் காட்டுவதாக அங்கு ஆய்வு செய்த மலேசிய தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் ஜேம்ஸ் நாயுடு, ஜெயபிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் இந்த மண்டலத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்ததோடு, இந்த மண்டலத்தின் சிறப்பு அம்சங்களை பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களிடம் எடுத்து சொல்லி முதலீடுகளை கவரப்போவதாகவும் கூறினர்.

பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்த மண்டலத்திற்கு வந்து தொழில் துவங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆரம்பத்தில் ரூ.15,000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கும் என்று சொல்லப்பட்டது. தற்போது பல்வேறு நாட்டினர் இங்கு தொழில் தொடங்க பெரும் ஆர்வம் காட்டுவதால் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு இங்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டத்தை சேர்ந்த 1 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள நாங்குநேரியானது  திருநெல்வேலி மாவட்டத்துக்கு உட்பட்டதாகும். தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் என சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் முக்கியமான வர்த்தக நகரம் திருநெல்வேலி என்பதால், பல முன்னணி வணிக நிறுவனங்கள் யாவும் போட்டி போட்டுக்கொண்டு திருநெல்வேலி பகுதியில் தொழில் தொடங்கி வருகின்றன.

உள்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, சாலைவசதி போன்ற விஷயங்களும் நன்றாகவே இருப்பதால் புறநகர விரிவாக்கம் மிக வேகமாக இருக்கிறது.
கடந்த 6 வருடங்களில்  புறநகர வளர்ச்சி பல மாற்றங்களை கண்டுவருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மிக செழிப்போடு இந்த பகுதியில் நடந்து வருகிறது. நிலத்தின் விலை பன்மடங்கு உயரும் என்பதால் நாங்குநேரியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில், மனை பிரிவுகளை அமைத்து மக்களுக்கு நியாமான விலையில் விற்பனை செய்து வரும் ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் மனைகளை அதிகமான மக்கள் வாங்கி வருகின்றனர்.

சர்வதேச அளவில் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கும்,  ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம், அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமாக சொத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், ஏராளமானோருக்கு  வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்  என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.
2 லட்சம் வாடிக்கையாளர்களையும், 50 ஆயிரம் முகவர்களையும் கொண்ட இந்த மாபெரும்  நிறுவனத்திற்கு  தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. சிங்கப்பூரிலும் கிளை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ள பகுதிகளை தேர்வு செய்து அவற்றிற்கு அருகாமையில் மனை பிரிவுகளை அமைத்து நியாயமான  விலையில் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

தியாகராஜன்

 

Issues: