பயனுள்ள காப்பீட்டு திட்டங்கள்
நியூ இந்தியா அஷயூரன்ஸ் நிறுவனம் 1972 ம் ஆண்டு முதல் பல சமூக நல காப்பீட்டு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பின்வரும் காப்பீட்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவை.
கால்நடை காப்பீட்டு திட்டம்:
இத்திட்டத்தின் படிஅனைத்து கால் நடைகளையும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். கால்நடையின் மதிப்புத்தொகையில் ஆண்டுக்கு 4% பிரீமியம் செலுத்தினால் போதும்.
கோழிப்பண்ணை காப்பீட்டுதிட்டம்:
கறிக்கோழிகள், முட்டைக்கோழிகள், குஞ்சு பொறிக்கும் கோழிகள் என மூன்று இழப்பீட்டு திட்டங்கள் உள்ளன. கறிக்கோழிகளுக்கு 1 நாள் முதல் 8 வாரம் வரையிலும், குஞ்சு பொறிப்பக கோழிகளுக்கு ஒரு நாள் முதல் 72 வாரம் வரையிலும், முட்டைகோழிகளுக்கு 1 நாள் முதல் 72 வாரம் வரையிலும் இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம். முறையே 1.5% 5.5%, 5% பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும்.
ஜனதா/ கிராமின் விபத்து காப்பீட்டு திட்டம் :
விபத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இழப்பீடாக பணம் வழங்குவதே இப்பாலிசியின் நோக்கமாகும். இத்திட்டத்தில் 5 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைத்து தரப்பினரும் சேரலாம். ஒரு வருடத்திற்கு ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும். உலகின் எந்த இடத்தில் விபத்து ஏற்பட்டாலும் இழப்பீடு பெறலாம்.
வீட்டு உடமைகள் காப்பீட்டு திட்டம் :
வீடு, துணி, சமையல் பாத்திரங்கள், மின்னணு - மின்சார உபகரணங்கள், தங்கம், வெள்ளி, வைர நகை-கள், ரேடியோ டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களுக்கும் காப்பீடு பெறலாம்.இதற்கு பிரீமியம் மிகவும் குறைவுதான்.
வாகன காப்பீட்டு திட்டம் :
இந்திய மோட்டார் வாகனசட்டம் 1988 -ன் படி வாகனத்தை தீ, திருட்டு, விபத்து போன்ற-வற்றிலிருந்து பாதுகாக்க இத்திட்டம் மத்திய அரசால் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் காப்பீட்டு திட்டம் :
பள்ளி - கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இக்காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். இதன் மூலம் விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு பணம் பெறலாம்.
யுனிவர்சல் மருத்துவ காப்பீட்டு திட்டம் :
இத்திட்டம் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க மத்திய அரசின் மானியத்துடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 3 மாத குழந்தை முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.