Jan 2015

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’

தமிழகத்தில் 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு & சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களிலும் புதிதாக ஏற்படுத்தப்படும் நிறுவனங்களிலும் சிறப்பான மனித ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசால் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’ தொடங்கப் பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 18 முதல் 25 வயது வரை உள்ள பொறியியல்,
தொழிற்கல்வியியல், தொழில் பட்டயபடிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத பயிற்சி அளிக்கப்படும்.

சுயதொழில் தொடங்க போகிறீர்களா?

நம்மிடம் உள்ள சிறிய தொகையை கொண்டு தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது.
மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
மின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் சம்பந்தமான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி அத்தொழில்களை ஊக்குவித்து வருகின்றன.

தன்னம்பிக்கையே துணை!

2020 ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகும் என்று அப்துல் கலாம் சொன்னார். ஒரு நாடு பொருளாதார பலம், ராணுவ பலம், விஞ்ஞான ஆற்றல் பலம் இவற்றில் எல்லாம் முன்னிலையில் இருந்தால் அந்நாடு வல்லரசாவதற்கான தகுதியை அடைந்ததாக அர்த்தம். இந்த தகுதியை இந்தியா விரைவாக அடைய வேண்டுமெனில் மனித வள ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்த வேண்டும்.
நமது நாட்டில் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 65 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆற்றல்களாக மாறும்போதும் இந்தியா தனது வல்லரசு கனவை அடைவது நிச்சயம். ஆனால் நமது இளைஞர்களிடம் சில குறைபாடுகளும் உள்ளன.

பங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. குறிப்பாக நாள் வணிகத்தில் லாபம் பெறுவது மிகச் சிலரே.
நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.

நாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு!

நாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்களுக்கான செலவையும், பராமரிப்புக்கான செலவையும் குறைக்க முடியும். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. இதன் விளைச்சல் இரு மடங்காக அதிகரிக்கும் என விவசாய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கரும்பு சாகுபடிக்கு கரணை முறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு 4 டன் விதைக் கரும்பு தேவைப்படுகிறது. இதற்கான வெட்டு கூலி, சுமை வாடகை, நடவு கூலி இவற்றால் ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. நாற்று முறை சாகுபடி செய்யும்போது இந்த செலவை பாதியாக குறைக்க முடியும். பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக விளைச்சலை தரும்.

சரக்கு லாரி பெட்டியில் உருவான புதுமை கழிப்பறை

உணவு, உடை, உறைவிடம், கல்வி போன்றவற்றை போல, நல்ல கழிவறையும் மக்களின் அடிப்படை தேவையாக உள்ளது. இந்தியாவில் சுமார் 62 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.
50 சதவீத வீடுகளில் கழிப்பறையே இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலும், புறநகர் பகுதி களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் திறந்த வெளியைத்தான் கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களின் பிடியில் அவர்கள் சிக்க நேரிடுகிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு

சமீப காலமாக கிரிஸ்டல் நகைகளை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உண்டு. செயின் பறிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு, அதிக விலை கொண்ட தங்க நகைகள் இவற்றால் நடுத்தர வர்க்க குடும்ப பெண்கள் தங்க நகைகளின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. தங்க நகையின் இடத்தை, கிரிஸ்டல் நகைகள் பெற்றுள்ளது.
கிரிஸ்டல் நகைகளின் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக வும், அழகாகவும் காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் போன்றோர் மத்தியில் கிரிஸ்டல் நகைகள் பிரபலமடைந்து வருகின்றன.

உற்பத்தி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் 3டி பிரிண்டர்கள்

3டி பிரிண்டர் எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதுதான் பிரபலமாகி வருகிறது.
பிளாஸ்டிக், செராமிக் என தேவைக்கு தகுந்தார்போல டை-களை உருவாக்கும் பிரிண்டர்கள் இப்போது புழக்கத்துக்கு வந்துள்ளன.
இதனால் பாரம்பரியமாக டை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தொழிற்நுட்பத்திற்கு மாற வாய்ப்புண்டு. அவர்கள் மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.
அண்மையில் முடிவடைந்த டாவோஸ் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கூட அடுத்தகட்ட புரட்சியை 3-டி பிரிண்டர் ஏற்படுத்த வல்லது என கணித்துள்ளனர்

மின்சாரத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கும் உடன்குடி அனல்மின் நிலையம்

தமிழ்நாடு மின் வாரியம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இத்திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்கு, தமிழக அரசு, 2012 பிப்ரவரியில் அனுமதி வழங்கியது.
நிலம் கையகப் படுத்தும் பணி, சுற்றுச்சூழல்துறையின் அனுமதி வாங்கும் பணி, டெண்டர் விடும் பணி போன்றவை நிறைவுபெற்று மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

உலகின் கவனத்தை ஈர்க்கும் குலசேகரன் பட்டினம்

இந்திய வானியல் துறையில் ‘’இஸ்ரோ’’ வின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைய இருக்கிறது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. குலசேகரன்பட்டனத்தில் அமையும் போது அது 2வது ராக்கெட் ஏவுதள மையமாகவும் 3வது ராக்கெட் ஏவுதளமாகவும் இருக்கும்.

Pages