அதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி

இன்றைய காலகட்டத்தில் விரைந்து செயல்பட வேண்டிய பணிகளுக்கு அவுட்சோர்சிங் பணியினை பலர் நாடுகின்றனர். இந்த பணிக்காக கேட்கப்படும் சேவை கட்டணத்தை தருவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்ப தெல்லாம் சிறந்த சேவையே.

ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஆய்வறிக்கையை 100 சதவீதம் உண்மையுடன் வழங்கப்படும் குறிப்பே அவுட்சோர்சிங் பணியாகும். இந்த அவுட்சோர்சிங் பணிக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு முன்பே சிறிய வேலைகளில் கூட முழுத்தகவலுடன் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

இந்த நன்மதிப்பை அவுட்சோர்சிங் பணிக்கு ஆதாரமான முதலீடு என்று கூட சொல்லாம். வங்கிகள் வழங்கும் கிரிடிட் கார்டு, வங்கி உறுப்பினர் சேர்க்கை விவரம், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம், திருமணத்திற்கு தயாராகும் ஆண், பெண்களின் முழு அறிக்கை விவரம் போன்றவை பெரும்பாலானோரால் ஆய்வு அறிக்கையாக கேட்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கையை கொண்டே சம்மந்தப்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையுடன் ஆய்வு அறிக்கையை வழங்க வேண்டும்.

இந்த அவுட்சோர்சிங் பணியை தனி நபராகவோ அல்லது ஒரு சிலர் சேர்ந்து கூட்டாகவோ மேற்கொள்ளலாம். சிறப்பாக பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் நன்றாக சம்பாதிக்கலாம். இன்றைக்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைத்துள்ளன.

இது இந்திய அவுட்சோர்சிங் துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. தொடர்ந்து வேலை இருந்துகொண்டே இருக்கும் என்பது அவுட்சோர்சிங் பணியின் முக்கிய சிறப்பம்சம். 365 நாட்களும் தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டே இருக்கும். இதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம். இதே அவுட் சோர்சிங் பணியை அதிக முதலீடு கொண்டு விரிவாக செயல்பட்டால் வெளிநாடுகளுக்கு தேவையான தகவல்களை அனுப்பும் வகையில் பெரிய ஐ.டி.நிறுவனமாக செயல்படலாம்.

அவ்வாறு செயல்படும் போது அன்னிய செலாவணியை ஈட்டுத்தர முடியும். மேலும் ஏராளமான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். நாட்டில் தீவிரவாதம், அன்னியசதி திட்டம் போன்றவை அதிகரித்ததை அடுத்து இன்றைக்கு அனைத்து வங்கிகளும், தனியார் நிறவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும், பெரும் செல்வந்தர்களும், ஆய்வு நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் அவுட்சோர்சிங் பணியை எதிர்பார்க்கின்றன.

எனவே அவுட்சோர்சிங் தொழில் என்பது தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி கொண்டிருக்கும் ஒரு தொழில் என்பது புலனாகிறது. இந்த தொழிலில் ஈடுபடுவோர் கண்டிப்பாக நன்றாக சம்பாதிக்க முடியும்.

பாண்டியன்

Issues: