வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்

தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது. வாய்ப்பை

சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
டாடா, பிர்லா, அம்பானி, நாராயணமூர்த்தி, ஷிவ் நாடார் உள்ளிட்ட வெற்றிபெற்ற தொழில திபர்கள் எல்லாம் வாய்ப்பை

சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.
தன்னம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் கஷ்டங்களில் கூட வாய்ப்பை கண்டுணர்வார்கள். நம்பிக்கை இல்லாதவர்களோ

கிடைக்கும் வாய்ப்புகளில் கூட கஷ்டத்தைக் காண்பார்கள்.
ஒருமுறை இரவு நேரத்தில் மாவீரன் நெப்போலியன், தனது படைவீரர்கள் தங்கியுள்ள முகாமுக்கு சென்றார்.

அங்கிருந்த காவலன் புதியவன் என்பதால் வந்திருப்பவர் யாரென்று தெரியாமல் யார் நீங்கள்? என்று கேட்கிறான்..
உடனே நெப்போலியன் தனது பணியாள் தன்னையே கேள்வி கேட்பதா என்று கோபம் கொள்ள வில்லை. மாறாக

புன்னகையுடன் பதிலளிகிறார்;
‘நான் பிறப்பால் கார்சிகன், தொழிலால் ஒரு போர்வீரன், சாதனையால் ஒரு சக்கரவர்த்தி’ என்று சொன்னவுடன்

காவலன் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆச்சரியமும் கொள்கிறான். தன்னை கண்டிக்க வாய்ப்பிருந்தும் கண்டிக்காத

மன்னரின் பொறுமை குணத்தையும், புத்தி சாதுரியத்தையும் கண்டு வியக்கிறான்.
ஒரு சக்கரவர்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொண்டார் பார்த்தீர்களா? பெரிய காரியங்களுக்கு

மட்டும்தான் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்பதல்ல. இது போன்ற சிறிய காரியங்களிலும் வாய்ப்பை

பயன்படுத்துவது அவசியம்.
நாட்டை கையாள்வதற்கு எவ்வளவு சாதுர்யம் தேவையோ அவ்வளவு சாதுர்யம் மனிதர்களை கையாள்வதிலும்

தேவை என்ற உண்மையை நெப்போலியன் நன்கு உணர்ந்திருந்தார். எனவேதான் தனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம்

தனது புத்திக்கூர்மையை நிரூபித்தார்.
நெப்போலியன் குள்ளமான உருவம் கொண்டவர். 4 அடி 10 அங்குலம்தான் அவரது உயரம். ஆனால் தனது ஆற்றலால்

ஒரு மாபெரும் பேரரசையே கட்டமைத்தார். குறைந்த நேரமே தூங்கி நாட்டுக்காக முழுமையாக உழைத்தார்.

போர்க்காலங்களில் சவாரி செய்யும் குதிரையின் மீதே குறைந்த நேரம் தூங்கி, அதிக நேரத்தை போர்ப் பணிகளுக்கு

செலவிட்டார்.
அனைத்து விசயங்களிலும், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். கிடைத்த வாய்ப்புகளை

பயன்படுத்திக்கொண்டதோடு வாய்ப்புகளை உருவாக்கவும் செய்தார். வெற்றிமேல் வெற்றி பெற்றார். இதனால்

வரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதோடு, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் காரியம் செய்யவும் வேண்டும்.
ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். இதற்காக உலகளவிலான

ஓவிய போட்டியை வைத்தார். குழந்தை பருவத்தில் தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த ஓவிய ஆசிரியரை

போட்டியின் நடுவராக நியமித்தார்.
வந்திருந்த ஓவியங்கள் நடுவரை திருப்தி படுத்தவில்லை. என்ன செய்யலாம் என்று நடுவரிடம் ஆலோசனை கேட்டார்

மன்னர்.
‘இந்த ஓவியங்களை ஓர் அறையில் வைப்போம். அங்கு சேவல்களை விடுவோம். எந்த ஓவியத்தைப் பார்த்துச் சேவல்

சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்‘ என்றார் அந்த

நடுவர்.
நடுவரின் யோசனையை நிறைவேற்ற கட்டளை பிறப்பித்தார் மன்னர். ஆனால் வந்த சேவல்கள், எந்த ஓவியத்தையும்

பார்த்துச் சண்டை போடாமல் வெளியே வந்தன.
உடனே மன்னர் ‘சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?’ என

ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.
ஆறு மாத கால அவகாசம் தந்தால் ஓவியத்தை வரைந்து தருவதாக கூறினார் நடுவர். மன்னரும் ஏற்றுக்கொண்டார்.

ஆறு மாதம் கழிந்தது. அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த நடுவர் எந்த

ஓவியத்தையும் கொண்டு வரவில்லை.
ஓவியம் என்னவாயிற்று? என கேட்டார் மன்னர்.
உரிய உபகரணங்கள் கொடுத்தால் அரை மணி நேரத்தில் இங்கேயே ஓவியம் வரைந்து கொடுப்பதாக சொன்னார்

நடுவர். உபகரணங்கள்
அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் விரைவாக ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு

வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன.
அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப்

போனது. அவரது ஓவியம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நல்ல ஓவியம் கிடைத்த மகிழ்ச்சியில் நடுவரை பாராட்டிய மன்னர், இந்த வெற்றி உங்களுக்கு எப்படி சாத்தியமானது?

என கேட்டார்.
அந்த நடுவர் கூறியது என்ன வென்றால்..........ஆறு மாதமாகஅவர் கோழி, சேவல்களோடு வாழ்ந்திருக்கிறார். அவை

எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே அவரும் உணவு உட்கொண்டிருக்கிறார். அவை எப்படி நடக்கிறதோ அது

போலவே அவரும் நடந்து கொண்டிருக்கிறார். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே அவரும் தூங்கிஇருக்கிறார்.

கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி இருந்திருக்கிறார்.
இதுதான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஓவியர் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தோடு,

ஆழ்ந்த ஈடுபாட்டுடன் காரியமும் செய்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார்.
தொடரும்.....

Issues: