சாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்?

சாதனையாளர் ஆவதற்கான முதல்படியே தன்னை அறிதல்தான். நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றார் கண்ணதாசன்.

ஒருவர் முதலில் தன்னைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தனித்தன்மை என்பது திறமைகளை உள்ளடக்கியது. அத்திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவை.
மனத்தை எந்த அளவுக்கு பாங்கோடு வைத்திருக்கின்றோமோ அந்த அளவுக்கு வளர்ச்சி சாத்தியம்.
அதனால்தான் வள்ளுவர் பாடினார்:

“வெள்ளத்தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு”
சாதனையாளர்கள் யாவரும் உள்ளத்தால் பண்பட்டவர்களே. உலக அதிசயமான  தாஜ்மகாலை ஷாஜஹான் கட்டினான் என்று ஒரு வரியில் வரலாற்று உண்மையை தெரிந்துகொண்டு விடுகிறோம். ஆனால் அந்த ஒரு வரிச்செய்தி உருவாவதற்கு எத்தனை இன்னல்களை ஷாஜஹான் கடந்திருப்பான் என்பதை நாம் அறியமாட்டோம்.
 

பல ஆண்டுகள் அவன் மனதில் உதித்த கனவு அது. தாஜ்மகாலின் ஒவ்வொரு கல்லும் ஷாஜஹானின் பேர் சொல்லும். அந்த அளவுக்கு அவனது பெருமுயற்சியால் தாஜ்மகால் எனும் காவியச் சின்னம் உருவாக்கப்பட்டது.
இப்படித்தான் எல்லா சாதனையாளர்களுக்குப் பின்னும் பெருமுயற்சியும் ஈடுபாடும் அளவில்லா உழைப்பும் இருக்கும்.

சாதனையாளர்களின் இயல்புகள் என்னவாக இருக்கும என்பதற்கு உளவியல் அறிஞர்கள் சொல்வது :
* தன்னைப் பற்றி முழுமையாக அறிந்திருப்-பார்கள். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை எப்போதும் கைவிடமாட்டார்கள்.
* எப்போதும் தன்னூக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடமாட்டார்கள்.
* விடாமுயற்சி என்பது இவர்களின் ரத்தத்தோடு ஊறியதாகும்.
* நோக்கத்தை அடைவதிலேயே மனத்தை செலுத்திக் கொண்டிருப்பார்கள்.
* சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்-களாக இருப்பார்கள்.
* தற்காலிக சுகத்தை நாட மாட்டார்கள்.
* செயல்படுவதிலும் உழைப்பதிலுமே இன்பம் அடைவார்கள்.
* எண்ணம், செயல் இவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
சாதனையாளர்களின் இத்தகைய இயல்புகளை யார் வளர்த்துக் கொண்டாலும் அவர்களும் சாதனையாளர்களே.
 

தங்கவேல்

 

Issues: