‘தமிழக பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டும்’

ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் கிளையை உலகம் போற்றும் சிங்கப்பூர் நகரத்தில் துவங்கியதற்கு முக்கிய காரணம் என்ன என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். சிங்கப்பூர் நாட்டுடன் தமிழக மக்களுக்கு மொழி , பண்பாடு, கலாச்சார ரீதியாக மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதால் இந்த நாட்டில் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக என் உள்ளத்தில் இருந்து வந்தது. அதன் வெளிப்பாடுதான் சிங்கப்பூரில் உள்ள எங்களது ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம்.

இந்நாட்டில் நிறுவனம் தொடங்கியதை நான் மிகவும் பெருமையாக எண்ணுகிறேன். இத்தருணத்தில் சிங்கப்பூர் குறித்து முக்கியமான சில விசயங்களை சொல்வது அவசியமென கருதுகிறேன். தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு சிறு தீவுதான் சிங்கப்பூர். 715 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 55 லட்சம். இவர்களில் சீனர்கள் 74 சதவீதமும், மலாய்க்காரர்கள் 14 சதவீதமும், இந்தியர்கள் 10 சதவீதமும் அடங்குவர். இந்தியர்களில் 65 சதவீதம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான மக்கள் பௌத்த சமயத்தை கடைபிடிக்கின்றனர். சிங்கப்பூரின் தேசிய மொழிகளாக சீனம், மலாய், தமிழ் , ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகள் கடைபிடிக்கப் படுகின்றன.

1824 ல், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இங்கு வந்து கொடுக்கல், வாங்கல் தொழில் நடத்தத் தொடங்கினர். இலங்கையிலிருந்தும் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்து பல்வேறு அலுவலகப் பணிகளில் ஈடுபட்டனர். சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள ராமர் திருவடிக்கு 1828 ல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது. இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.

தென் கிழக்காசிய நாடுகளில் சிங்கப்பூரில்தான் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்துள்ளது. இது அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும் . இதனால் பல்வேறு நன்மைகளை தமிழர்கள் அடைந்தனர். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் வாய்ப்புள்ளது. தமிழில் ஒருவர் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் அங்கு வசதிகள் உள்ளன. அரசாங்க அலுவலகங்களில் பெயர்கள், அறிவிப்புகள், விளம்பரங்கள் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் இடம் பெற்றுள்ளன. சிங்கப்பூர் விமானங்களிலும் பயணிகளுக்கான அறிவிப்புகளும் பாடல்களும் தமிழில் உள்ளன. ஒரு அந்நிய தேசம் தமிழுக்கு தருகிற மரியாதையை நினைக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த சிங்கப்பூரை உலகின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியவர் லீ குவான் யூ. அவரது அந்தப் பணிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமிழர்கள். அதனால்தான் தமிழை ஆட்சி மொழி ஆக்கியதோடு, சீனர்களுக்கு இணையான பல உரிமைகளை தமிழர்களுக்கும் லீ வழங்கினார். பொதுவாக நாடுகள் போராட்டங்கள் மூலமாகத்தான் சுதந்திரத்தை அடையும். பல்வேறு நாடுகளும் அப்படித்தான் சுதந்திரத்தை அடைந்தன என்பதை நாம் அறிவோம். ஆனால் உலகிலேயே வலுக்கட்டாயமாக சுதந்திரம் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நாடு சிங்கப்பூர் ஆகும்.

மலேசியாவில் இருந்து பிரிந்த போது சிங்கப்பூர் மிக மோசமான நிலையில் இருந்தது. நாட்டை உயர்வு நிலைக்குக் கொண்டு வர அனைவருடனும் இணைந்து முயற்சிகளை எடுத்தார் சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ. ஊழலற்ற ஒரு சிறந்த நிர்வாகத்தை லீ தந்தார். இந்த அம்சம் பல அந்நிய நாட்டு நிறுவனங்களை சிங்கப்பூரை நோக்கி இழுப்பதற்கு காரணமாக அமைந்தது. ஒரு குட்டி நகரத்தில் 7ஆயிரம் அந்நிய நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பது உலகத்தில் எந்த நகரத்திலும் நிகழாத அதிசயம். தொழில் தொடங்க வரும் முதலாளிகளின் தேவைகள் அனைத்தையும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்க 50 வருடங்களுக்கு முன்னரே வழிவகை செய்தது ஒரு முக்கியமான திருப்பம் என்றே சொல்ல வேண்டும்.

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரில் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தொழில் தொடங்கின என்றால் அதற்கு காரணம் லீயின் நிர்வாகத் திறமைதான். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை பல உலகத் தலைவர்கள் அவரிடம் ஆலோசனை பெற்று வந்தது குறிப்பிடத் தக்கது. மக்கள் நலனில் அக்கறையும், கட்டுப்பாட்டுடன் கூடிய ஜன நாயகமுமே மக்களை மேம்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை முன் வைத்து அதில் வெற்றியும் கண்டார் லீ.

நாட்டை ஒரு சிறந்த நிறுவனம் போல் நடத்தினார் லீ. அதே நேரத்தில் அது மனித நேயம் கொண்டதாகவும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். உலகின் பொருளாதார சக்தி மிக்க நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூரை உயர்த்திய சாதனை மட்டுமல்ல, பல மொழிகள் பேசும் மக்கள் நிறைந்த அந்த நாட்டில் சிறுபான்மையினரான மலாய் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் ஆட்சி நடத்திய சாதனையையும் அவர் நிகழ்த்தி இருக்கிறார். தனது தனிச்சிறப்பு மிக்க ஆட்சியின் மூலம் சிங்கப்பூரை ஒரு மாபெரும் பொருளாதார சக்தி மிக்க நாடாக மாற்றினார். சிறிய நாட்டை சிங்கார பூமியாக்கிய லீ குவான் யூ தமிழர்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான காரியங்களை செய்துகாட்டினார்.

மோசமான நிலையில் இருந்த சிங்கப்பூரை முன்னேற்ற பல சட்டங்களை இயற்றினார். மக்களும் சிங்கப்பூரை முன்னேற்ற கடுமையாக உழைத்தார்கள். பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு நாட்டை மிகவும் உயர்ந்த இடத்திற்கு 30 வருடங்களில் கொண்டு வந்தார். இது சாதாரண விசயமல்ல. இதன் பின்னால் அவரது கடுமையான உழைப்பும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் உள்ளது.

நாட்டை முன்னேற்றி, மற்ற நாடுகளுக்குத் தன் நாட்டை முன்னுதாரணமாக ஆக்கிக் காட்டிய லீ யின் மரணம் சிங்கப்பூர் மக்களை உலுக்கி எடுத்து விட்டது. லீ குவான் யூ மரணம் சிங்கப்பூருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரும் இழப்பாகும். இன்னும் சில மாதங்களில் சிங்கப்பூர் தனது 50 வது தேசிய தினத்தை (ஆகஸ்ட் 9) கொண்டாட இருக்கும் நேரத்தில், அதைக் காணாமலே சென்று விட்டாரே என்று அந்நாட்டு மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழ்கிறார். அவர் தொடர்ந்து வாழ்வார். உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் லீயின் இறப்பிற்குக் கொடுத்த முக்கியத்துவம், அவர் உலக அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்த்தும்.

அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களில் மன்னார் குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த பலர் உள்ளனர். இப்பகுதிகளைச் சேர்ந்த பரவாக்கோட்டை, கூப்பாச்சிக் கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப் பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக் கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு. இந்தக் கிராமங்களில் இருந்து சிங்கப்பூர் சென்று வருபவர்கள் அதிகம். கட்டுமானம், துறைமுகம்,வணிக நிறுவனம், கோயில் போன்றவற்றில் பணிகளை மேற்கொள்பவர்களாகவும், மென்பொருள் நிறுவனங்களில் பொறியாளர்களாக பணிகளை மேற்கொள்பவர்களாகவும் இந்தப் பகுதி மக்கள் திகழ்கின்றனர். ஏராளமானோர் நிரந்தர குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே வசித்து வருவதை குறிப்பிடத்தக்க அம்சமாக கூறலாம்.

இதனால், சிங்கப்பூருக்கும் மன்னார்குடிக்கும் இடையே திருமணத்துக்கு பெண் எடுப்பது, கொடுப்பது போன்ற கலாச்சார நிகழ்வுகளும் மிகச் சாதாரணமாக நடந்து வருகின்றன. சிங்கப்பூரின் சமூக, பொருளா தாரத் துறைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மன்னார்குடி பகுதியிலும் எதிரொலிப்பதை நாம் உணர முடியும். மன்னார்குடி பகுதியில் இன்று நடக்கும் பல வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான முதலீடு சிங்கப்பூரில் இருந்தே கிடைக்கிறது என்றால் அது மிகையில்லை. அந்நாட்டின் நாணய மான டாலர் மதிப்பு உயர்ந்தால் மன்னார்குடி பகுதி மக்களின் வாழ்க்கைத் தரமும் உயருவதை காண முடியும்.

 சிங்கப்பூரின் தந்தையும் பொருளாதார சிற்பியுமான லீ குவான் யூவின் மறைவு சிங்கப்பூர் தமிழர்களிடம் மட்டுமின்றி, மன்னார்குடி பகுதி மக்களிடமும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள பல கிராமங்களில் லீ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததை தமிழக அரசியல் பிரமுகர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். மார்ச் 29-ம் தேதி மன்னார்குடி நகரில் நடந்த இரங்கல் ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தின் இறுதியில் லீ குவான் யூ நினைவாக மன்னார்குடியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

மன்னார்குடி பகுதியில் உள்ளவர்களில் பலரை வாழ வைத்த நாடு சிங்கப்பூர். அதற்கு காரணமான லீ குவான் யூ, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே மணிமண்டபம் கட்ட தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்ததை இங்கு குறிப்பிடுவது அவசியம். இந்தியாவின் ஏதோ ஒரு தமிழக கிராமத்தில் லீ க்கு இரங்கல் பேனர் வைத்ததோடு மணி மண்டபமும் அமைக்க இருக்கிறார்கள் என்றால், அது, சிங்கப்பூர் என்ற நாட்டால் அவர்கள் வளர்ச்சி அடைந்ததற்கான நன்றி கடனாகும். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியில் பங்கு வகிப்பதைப் போல நமது இந்தியா மற்றும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்க எங்களது ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனம் ஒரு பாலமாக உள்ளது. ஆம்.. சி

ங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் எங்கள் நிறுவனத்தின் வீட்டு மனைகளில் முதலீடு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். அவ்வாறு வீட்டு மனைகளில் முதலீடு செய்பவர்களின் நிலமதிப்பு சில ஆண்டுகளிலேயே பன்மடங்கு உயரும். எங்கள் நிறுவனத்தின் வீட்டு மனைகளை அவர்கள் வாங்கும் போது பத்திர பதிவிற்கு குறிப்பிட்ட பணம் தருவதால் தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் சிங்கப்பூர் தமிழர்கள் பங்கு வகிப்பார்கள்.

எனவே எங்களது ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தின் திட்டம் குறித்து சிங்கப்பூர் தமிழர்கள் அறிந்து கொள்வதற்காக சில தகவல்களைச் சொல்கிறேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமாக சொத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவும் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ஆல்வின் கோல்டன் சிட்டி. எங்கள் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அருகாமையில் மனைப் பிரிவுகளை அமைத்து வருகிறோம். 2 லட்சம் வாடிக்கை யாளர்களையும், 30,000 முகவர்களையும் பெற்றுள்ள எங்கள் நிறுவனம் சர்வதேச அளவில் முன்னணி ரியல்எஸ்டேட் நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எங்கள் நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. சிங்கப்பூரிலும் கிளை உள்ளது என்பதை மேலேயே தெரிவித்தேன். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ள பகுதிகளை தேர்வு செய்து அவற்றிற்கு அருகாமையில் மனை பிரிவுகளை அமைத்து நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறோம். ஓஎம்ஆர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நாங்குநேரி போன்ற சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அருகாமையில் நாங்கள் மனைகளை அமைத்து வருகிறோம். குறிப்பாக தூத்துக்குடி அருகே உள்ள திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகாமையில் நாங்கள் அமைத்துள்ள மனை பிரிவுகள் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இருக்கின்றன.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, பாண்டிச்சேரி உள்ளிட்ட மற்ற மாநிலத்தை சேர்ந்த மக்களும், எங்கள் மனைகளை வாங்கி பயனடைந்து வருகின்றனர். சிங்கப்பூர் தமிழர்களும் இப்பயனை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த மனைகளில் முதலீடு செய்யும் போது அது விரைவாக பன்மடங்கு விலை அதிகரிக்கும் என்பது அசைக்க முடியாத உண்மை. அதனால் தான் நாங்கள் தூத்துக்குடி அருகே உள்ள திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மனை பிரிவை அமைத்தோம். அது ஏன் என்பது குறித்து கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

நா‌ங்குநே‌ரி‌யி‌ல் ரூ.15,000 கோடி‌ செல‌‌வி‌ல் ‌சிற‌ப்பு பொருளாதார ம‌ண்டல‌ம் அமைந்து வருகிறது. இ‌‌ந்த ‌தி‌ட்ட‌த்தா‌ல் 70,000 பே‌ர் வேலைவா‌ய்‌ப்பு பெறுவா‌ர்க‌‌ள் எ‌ன்று அரசு மதிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தால் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சி மிகவும் அதிகரிக்கும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் பெருகும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உறுதுணையாக இருக்கும் என்பது அடிப்படை பொருளாதார உண்மை. இந்தியா இதுவரை 154க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளித்திருக்கிறது.

இதன் காரணமாக இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் நாங்குநேரி சிறப்பு பொருளாதா மண்டலத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. . 50 கி.மீ.,க்குள் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் விமான நிலையம், 100 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம், 120 கி.மீ. தூரத்தில் மதுரை விமான நிலையம் போன்றவை உள்ளன.

மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், உடன்குடி அனல்மின் நிலையம், குலசேகரன் பட்டினம் ராக்கெட் ஏவுதளம், ஐ.என்.எஸ். கடற்படை தளம், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்றவையும் அமைந்துள்ளன. அத்துடன் இந்த பகுதியில் தான் நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு கி.மீ. தூரத்தில் ரயில் நிலையமும் உள்ளது. தொழிலாளர்களை உருவாக்கும் ஐ.டி.ஐ. -மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் இந்த பகுதியில் அமைந்து வருகின்றன. எனவே தொழிலாளர் பற்றாக்குறை இருக்காது. ஏறத்தாழ 2520 ஏக்கர் நிலப்பரப்பி அமைந்து வரும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அனைத்து வகை தொழில்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை அளிக்கும்.

இச்சிறப்பு பொருளதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மற்றும் பொருள் போக்குவரத்து ஆகியவை தொடர்பான தொழில்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மண்டலம் தமிழகத்தில் அமையும் பல்துறை பொருள்கள் சார்ந்த முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தென்மாவட்டங்களில் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைந்து இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாய் அமையும்.

இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகிலேயே ஆல்வின் கோல்டன் சிட்டி அமைத்துள்ள பல்வேறு மனை பிரிவுகள் அமைந்துள்ளன என்பது சுட்டிக் காட்டப்பட வேண் டிய செய்தியாகும்.நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து குறைந்த தூரத்திலேயே தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. இது மற்றுமொரு சிறப்பு அம்சமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள குலசேரகன் பட்டனத்தில் இந்திய அரசு மூன்றாவது ஏவுதளத்தை நிறுவ இருக்கிறது.

இதன் மூலம் உலக அளவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கவனம் பெறும். மேலும் தென்மாவட்ட மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்களின் நிலை பொருளாதார அளவில் உயர்ந்து அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அப்போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அருகாமையில் உள்ள நிலங்களின் மதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும்.

இத்தகைய காரணங்களால் தான் தூத்துக்குடிக்கு அருகே திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு அருகாமையில் நாங்கள் அமைத்துள்ள மனை பிரிவுகளை ஏராளமான மக்கள் முதலீட்டு நோக்கத்திற்காகவும் வீடு கட்டி வசிப்பதற்காகவும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அத்துடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறோம். ஏராளமான பெண்களும் எங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்று நன்றாக சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வாய்ப்பை சிங்கப்பூர் தமிழர்களும் பெற்று மேலும் செல்வச் செழிப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

Issues: