விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிய, பருவம் தவறிய மழை! உதவிக்கரம் நீட்டுமா? மத்திய மாநில அரசுகள்?

பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்தான் விலையையும் நிர்ணயம் செய்வார். நமது நாட்டின் பெரு நிறுவனங்களானாலும் சரி, குடிசைத் தொழிலானா லும் சரி உற்பத்தி செய்பவரே விலையையும் நிர்ணயம் செய்கிறார்.
ஆனால், மண்ணில் வெயிலும், மழையும் பாராது அயராது உழைக்கும் விவசாயிகளோ , விளைவிக்கும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை இல்லாதவர்களாக இருக்கின்றனர்.
நிலத்தை உழுது பயிரிட்டு, அதை அறுவடைக்குக் கொண்டு வருவதற்குள் விவசாயி படும் இன்னல்கள் சொல்லி மாளாது. பயிரை விளைவித்து அதை பணம் பண்ணுவதற்கு விவசாயி மாதக் கணக்கில் காத்திருக்க நேரிடுகிறது.
அமோக விளைச்சல் சில விவசாயிகளுக்கு கிடைத்தாலும் அவர்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலே நிலவுகிறது.
சில நேரங்களில் மழை வெள்ளத்தால் விளைச்சலே வீணாகிப் போகவும் செய்கிறது. இதில் பருவம் தவறிப் பெய்யும் மழையும் விவசாயிகளை பாடாய் படுத்துகிறது.
சமீபத்தில் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் 1.8 கோடி ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நாசமாகியுள்ளன.
கடுகு, கோதுமை, பருப்பு, எண்ணெய் வித்துகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
ஏற்கனவே விவசாய இடுபொருட்களின் விலையுயர்வால் தத்தளித்துக் காண் டிருக்கும் விவசாயி களுக்கு பருவம் தவறிய மழை பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.
பெய்யாமல் கெடுப்ப தும், பெய்து கெடுப்பதும் மழைக்கு வாடிக்கையாகி விட்டது போலும். தால் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் தான் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டும் ரூ.1800 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
அங்கு இந்த ஆண்டில் மட்டும் 450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி, மத்திய மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்ப வைக்கிறது.
இயற்கைச் சீற்றத்தால் பயிர்களை இழந்த உழவர்களுக்கு உதவும் வகையில் பயிருக்கான இழப்பீடு 50% உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும், இன்று வரை உழவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
மத்திய அரசு அறிவிக்கும் உதவியை விட இரு மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த உத்தரப்பிரதேச அரசு, பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.63, ரூ.78, ரூ.100, ரூ.112 என காசோலைகளை வழங்கியி ருக்கிறது. இதனால் அம்மாநில விவசாயிகள் கொதித்து போயிருக்கிறார்கள்.
பயிர் சேதம், வாங்கிய கடனை திரும்பத்தர முடியாத நிலை, வட்டிக்கு கடன் தந்தவர்களின் தொல்லை என நெருக்கடிகள் முற்றியதால் கடந்த 4 வாரங்களில் மட்டும் வட மாநிலங்களில் 100 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மற்றுமொறு முக்கிய சம்பவம் நாம் அறிந்ததே.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் நடத்திய உழவர்கள் பேரணியில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தை சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி, போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை நாடே அதிர்ச்சியுடன் பார்த்தது.
காவல்துறையினர் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த தற்கொலை நாட்டிற்கே பெருத்த அவமானமாகும்.
3 குழந்தைகளின் தந்தையான கஜேந்திரசிங்கின் விளைநிலத்தில் நடப்பு பருவ பயிர்கள் மழையால் சேதமடைந்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதால் இந்த துயரமான முடிவை தேடிக் கொண்டிருக்கிறார்.
விவசாயத்தில் இழப்பும், அதனால் ஏற்பட்ட சோகமும் கஜேந்திரசிங்குக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்தியாவிலுள்ள உழவர்கள் பெரும்பாலானோரிடமும் இதேபோன்ற சோகங்கள் நிறைந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் கதையாக,வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கும் பயிர்க் கடன்களுக்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இதுவரை மத்திய அரசு வழங்கி வந்த வட்டி மானியத்தை அடியோடு ரத்து செய்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை 4 சதவீத வட்டிக்கு பயிர் கடன் பெற்று வந்த விவசாயிகள், இனிமேல் 7 சதவீத வட்டியைச் செலுத்த வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்காமல், வங்கி நிர்வாகங்களுக்கு மட்டும் சுற்றிக்கையாக அனுப்பியுள்ளது. உயர்த்தப்பட்ட வட்டியை உடனே குறைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
நாட்டு மக்கள் அனை வருக்கும் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ப வர்கள் விவசாயிகள். இப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு ஆகும்.

கார்த்திக்

Issues: