பங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே. குறிப்பாக நாள் வணிகத்தில் லாபம் பெறுவது மிகச் சிலரே.
நாள் வணிகம் மிக எளிமையானதாகவும் அதிக லாபகரமானதாகவும் தோற்றமளிக்கலாம். ஆனால், நாம் ஒவ்வொரு கணமும் தயார் நிலையில் இருப்பது அவசியம்.
தொலைக்காட்சி, செய்தித்தாள் இவற்றில் கொடுக்கப்படும் கணிப்புகளை அப்படியே நம்பக்கூடாது. இவற்றில் கூறப்படும் பங்குகளில் அதிகம்பேர் ஆர்வம் காட்டுவதால் விலை தாறுமாறாக அதிகரிக்கும். இத்தகைய போக்கு நீடிக்கும் என சொல்ல முடியாது. எனவே, சரியான பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதே போல் பிறர் வாங்குவதைப் பார்த்து வாங்கக் கூடாது. ஆர்வமிகுதியால் ஏராளமான பணத்தை ஒரே பங்கில் போடவேண்டாம். எவ்வளவுதான் மிகச் சிறந்த நிறுவனத்தின் பங்காக இருப்பினும் 10 சதவீதத்திற்கு மேல் ஒரே பங்கில் போடுவது அபாயமானது. சொல்லப்போனால் சரியான அளவு 5 சதவீதம்தான். மேலும் ஒரு பங்கின் விலை சரிந்திருக்கும் பொழுது வாங்குவது சிலரது வழக்கம். மீண்டும் ஏறும் பொழுது ஆதாயம் கிடைக்கும். இந்தத் திட்டம் சரியானதுதான். ஆனால் ஒரு பங்கின் விலை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டால், அதை வாங்க வேண்டாம்.
முக்கியமாக லாபம் தரக்கூடிய துறைகள் எவை என்றும் நல்ல நிறுவனங்கள் என்னென்னவென்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தகவல் தொழில் நுட்பம், வங்கிகள் முதலியவை நல்ல துறைகள். இது குறித்துத் தெரிந்துகொள்ள நீங்கள் பல்வேறு நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் முதலியவற்றைப் பார்ப்பது நல்லது. ஆனால் அவை கூறும் ஆலோசனைகள் எல்லாவற்றையும் அப்படியே நம்பிவிடவேண்டாம். சிந்தனைத்திறனையும் தர்க்க அறிவையும் பயன்படுத்தி எப்பங்குகளில் ஈடுபடலாம் என நீங்களே முடிவு செய்யுங்கள்.
றிமீஸீஸீஹ் ஷிtஷீநீளீs எனப்படும், முன்பின் தெரியாத சிறிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாதீர்கள். மேலும் ஒரு பங்கின் பழைய வரலாற்றை, பழைய செயல்பாட்டை நம்பி அதை வாங்காதீர்கள். அதன் எதிர்காலத்தைக் குறித்த கணிப்புகளின் அடிப்படையிலேயே பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.

Issues: