காளான் வளர்ப்பு

வருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்!

காளானுக்கு இன்றைய நிலையில் மிகப்பெரும் மவுசு கூடியிருக்கிறது. ஸ்டார் ஓட்டல்களின் மெயின் மெனுவில்கூட காளான் உணவுகள் இடம் பிடிக்கிற அளவுக்கு அதன் மகத்துவம் பெருகியிருக்கிறது. அசைவம் சாப்பிடாத சைவ பிரியர்களுக்கு அசைவ சுவையைஅளிக்கும் அற்புதமான சைவ உணவாக காளான் இன்றைக்கு திகழ்கிறது.

நாக்கிற்கு நல்ல சுவையையும், உடலுக்கு நல்லசத்தையும் தரும் காளானில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவில் உள்ளன. தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர், பொட்டாசியம் போன்ற சத்துகளும் இதில் இருக்கின்றன.