வியாபார பெருக்கத்திற்கு உதவும் மக்கள் தொடர்பு பணியாளர்

விலை மதிப்பானதாக இருக்கும் தங்கத்தைக் கூட விளம்பரம் செய்துதான் விற்க வேண்டி இருக்கிறது. இத்தகைய

விளம்பரங் களை சரியான இடத்தில் கொண்டு சேர்க்க உதவுபவர்கள் மக்கள் தொடர்பாளர்கள்.
ஒரு பொருளுக்கும் சேவைக்கும் விரிவான தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் மக்கள் தொடர்பாளர்களின்

முக்கியபணி.
எங்கு விளம்பரபடுத்தினால் அதிகப்படியான கண்களுக்கும், காதுகளுக்கும் போய்ச் சேரும் என்பதை துல்லியமாக

ஆராய்ந்து அறிந்தவர்கள் மக்கள் தொடர்பாளர்கள். சிலர் அதிக செல விட்டு விளம்பரங்களை உருவாக்கி இருப்பார்கள்.
ஆனால் அவர்களது விளம்பரம் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் வெளியாகி இருக்கும். ஆனால் இவர்கள்

மூலமாக வெளியிடும் போது சரியாகச் சென்றடையும்.
இன்றைக்கு ஊடகங்கள் பெருகி விட்டன. அச்சு ஊடகமும், காட்சி ஊடகமும் , ஒலி ஊடகமும் உடனுக்குடன்

விரைவாக தகவல்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கின்றன.
நிறைய நிறுவனங்கள் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளதால் எது மக்களை அதிகம் சென்றடைகிறது என்ற தகவல்கள்

பலருக்கு தெரிவதில்லை.
ஆனால் இவர்களுக்கு தெரியும். எதில் வெளியிட்டால் பலன் கிடைக்கும் என்பதை அனுபவத்திலும் ஆராய்ச்சியிலும்

உணர்ந்தவர்கள் இவர்கள்.
அரசியல்வாதிகள், திரைநட்சத்திரங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள், சாதனையா ளர்கள், நுகர்பொருள்

தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் மக்கள் தொடர்பு பணியாளர்கள் தேவை என்பதால் இத்துறை வளர்ந்து

வரும் ஒரு துறையாக உள்ளது.

சிவக்குமார்

Issues: