கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களா?

இன்றைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. கிரெடிட் என்கிற இந்த கடன் அட்டையை பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை.
நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதுதான் கிரெடிட் கார்டின் அடிப்படை. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டாலும் நம்மை கடனாளியாக்கிவிடும்.
எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பில்லிங் காலத்திற்குள் கடனை செலுத்தி விடுங்கள். ஏனெனில் பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட்டால் வட்டி செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் நீங்கள் பொருள்கள் வாங்கும்போது விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ் வேர்டு கொடுங்கள்.அதுதான் பாதுகாப்பு.
டெபிட் கார்டை போல கிரெடிட் கார்டி லிருந்து பணம் எடுக்காதீர்கள். தொடர்ந்து பணம் எடுத்துக்கொண்டிருந்தால் கடன் சுமை அதிகரித்துவிடும்.
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
சிலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருக்கும். இவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிலர் கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். இது தவறான அணுகுமுறை. நிச்சயம் கடனாளி யாக்கிவிடும். இதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாமல் ஒருநாள் தாமதமாக கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டியிருக்கும். எனவே குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிடுங்கள்.
கிரெடிட் கார்டு கடனை கட்டாமல் விட்டால் உங்களது ரேட்டிங் குறையும். அப்படி ஆகும்போது தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிரமமாகிவிடும். எனவே கடனை கண்டிப்பாக கட்டிவிடுங்கள்.
சில நேரங்களில் கிரெடிட் கார்டு தொலைந்து விடக்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு தகவல் சொல்லி அதன் செயல்பாடுகளை முடக்கிவிடுங்கள். இல்லையெனில் அந்த கார்டை எடுத்த நபர் உங்களை கடனாளியாக்கி விடக்கூடும்.

Issues: