தகவல்

தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’

நிறுவனங்களின் செயல்பாட்டை கண்டறிய உதவும் பிசினஸ் ஹெல்த் ஸ்கேன் எனப்படும் புதிய நிர்வாக வழிமுறையை லீட்ஹை பிசினஸ் கன்சல்டன்சி என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனராக இருப்பவர்  தீனதயாளன். இவர் பிசினஸ்ஹெல்த் ஸ்கேன் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அது குறித்து பார்ப்போம்..
 ஒரு பொருள் உருவாவதற்கும், வடிவமைப்பு பெறுவதற்கும்  பிசினஸ் மாடல் மிக முக்கியமானதாகும். வணிகத்தில் வளர்ச்சி என்பது ஒரு நிலையில் இருந்து மேம்பட்ட இன்னொரு நிலையை அடைவதுதான்.

‘தமிழன் வங்கி’ உருவாகுமா?

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எவ்வளவோ சிறம்பம்சங்கள் உண்டு. சங்க காலத்திலேயே தமிழர்கள் கடல்கடந்து வணிகம் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ‘தமிழன் வங்கி’ உருவாக வேண்டும் என்பது தமிழ் வர்த்தக சங்கத்தின் நோக்கமாகும். இதற்காக இச்சங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

இச்சங்கம் நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1944ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சர் சண்முகம் செட்டியார்  இச்சங்கத்தை தொடங்கி வைத்தார்.