பிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப்பணிகளில் பணியாற்ற விரும்பு வோர்களில் பெரும் பாலானோரின் தேர்வு வங்கிப்பணியாகத்தான்

இருக்கும். வங்கிப் பணியாளர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைப்பதே இதற்கு காரணம்.
எனவேதான் வங்கிப்பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பட்டதாரிகள் காத்திருப்பார்கள்.
இத்தகையோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான

அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்பது நாம் அறிந்ததே. இந்திய வங்கித்துறையில்

மக்களுக்கு மிகச்சிறப்பான சேவையை அளித்து வரும் இந்த வங்கி கடந்த முறையை விட தற்போது அதிக

எண்ணிக்கையில் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
இதற்கான முதல் நிலைத்தேர்வு ஜுன் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது.
இந்தத் தேர்வுக்குப் பட்டதாரிகளும், கல்லுரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

படித்துக் கொண்டிருப்பவர் கள் 1.9.2015-க்கு முன்பாக பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது முக்கிய

நிபந்தனை.
வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி ஓபிசி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டி

பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு உண்டு. மே

மாதத்திற்குள் ஆன்லைனில் (www.sbi.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். ஹால்

டிக்கெட்டை ஜூன் 9-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் தேர்வு

நடக்கும்.
முதல்நிலைத் தேர்வில், ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 100 வினாக்கள்

கேட்கப்படும். இக்கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். தேர்வு 1 மணி நேரம் நடக்கும். இதில் வெற்றி

பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
மெயின் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, டேட்டா அனலைசிஸ், இன்டர்பிரட்டேசன், ரீசனிங் ஆகிய 4 பகுதிகளில்

200 வினாக்கள் கேட்கப்படும். இவையும் அப்ஜெக்டிவ் முறையில்தான் இருக்கும். தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.
ஆங்கிலத்தில் கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல் என விரிவாக விடையெழுதும் ஒரு தேர்வும் நடக்கும். 50

மதிப்பெண்கள் கொண்ட இந்தத் தேர்வு 1 மணி நேரம் நடக்கும்.
மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர், குழு விவாதம் மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வு

மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் இவற்றின் அடிப்படையில் தகுதியுள்ள நபர்கள்

பணிக்குத் தேர்வுசெய்யப் படுவர்.
தேர்வில் வெற்றியடைய என்ன செய்யலாம்?
பல பயிற்சி நிறுவனங்கள் இந்த தேர்வுக்கென பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. இந்த வகுப்புகளில்

பங்கெடுக்கும்போது கூடுதல் திறனை பெறலாம். பயிற்சி வகுப்பில் பங்கெடுப்பவர் அனைவரும் வெற்றி

பெறுவதில்லையே என சிலர் கேட்கலாம்.
தோல்விக்கு காரணம் பயிற்சி வகுப்புகள் கிடையாது. பயிற்சி வகுப்பில் பங்கெடுப்பவரின் முழுமையான

ஆர்வமின்மையும், கவனமின்மையும், ஈடுபாடின்மையுமே தோல்விக்கு காரணம் என்று சொன்னால் அது

மிகையில்லை.
வெற்றிக்கு அடிப்படையே ஆர்வம், முயற்சி,உழைப்பு, ஈடுபாடு இவைதான். இந்த குணநலன்களோடு செயல்படுபவர்கள்

வெற்றிபெறுகிறார்கள். எனவே இந்த குணநலன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மனப்பாடம் செய்யும் மனநிலையை விட்டு புரிந்து படிக்க வேண்டும். வகுப்பில் விவாதிக்கும் விசயங்களை வீட்டிலும்

வந்து பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.
வகுப்புகளில் கற்றுக்கொண்டதை திரும்ப திரும்ப பயிற்சி செய்ய வேண்டும். இது அறிவாற்றலை மேலும் கூர் தீட்ட

உதவும்.
தேசிய அளவில் வெளியாகும் இரண்டு மூன்று செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும்.புத்தகங்களில் உள்ள

பயிற்சிகளை முழுமையாகச் செய்து பார்க்கவேண்டும். மாதிரித் தேர்வு வினாத்தாள்களை சேகரித்து அதற்கு பதில்

எழுதி பயிற்சி செய்யலாம்.
தொடர் பயிற்சி உங்களின் பலவீனத்தை யெல்லாம் மாற்றி உங்களது பலத்தை அதிகரிக்கச்செய்யும்.

தன்னம்பிக்கையை மிளிரச்செய்யும். பிறகு என்ன? வெற்றி உங்களை நாடி வரும்.
சகா

Issues: