வாழ்க்கையை பெண்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாரதீய மகிளா வங்கி

உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த மக்கள் தொகை யில் சுமார் 50 சதவிகித பெண்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களில் 25 சதவிகிதப் பெண்களுக்குத்தான் முறையான வங்கிக் கணக்கு இருகிறது. அதிலும் மிகச் சிலரே வங்கிக் கணக்கை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான குடும்பங்களில், நிதி நிர்வாக முடிவுகளை ஆண்களே எடுகிறார்கள். பல பெண்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டுமென்றால் அக்கம்பக்கத்தினரையே நம்பி இருக்கின்றனர்.
இந்நிலையில் நிதி நிர்வாகத்தில் பெண்களை பங்கேற்கச் செய்யவும், அதன் மூலம் அவர்களது அதிகாரத்தை அதிகரிக்கவும் சிறப்பு வங்கிச் சேவை அவசியமாகிறது. இதற்காக தொடங்கப் பட்டதுதான் பாரதீய மகிளா வங்கி.
இதர பொது வங்கிகளைப் போன்றதுதான் பாரதீய மகிளா வங்கியும். அந்த வங்கிகளுக்கான சட்ட விதிமுறைகள் மகிளா வங்கிக்கும் பொருந்தும். இந்த வங்கியின் முக்கிய நோக்கம், பெண்களை பொருளாதாரத்தில் அதிகாரம் கொண்டவர்களாக மாற்றுவதாகும்.
ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்துக்குள் இந்தியா முழுவதும் 37 கிளைகளை கொண்ட வங்கியாக உருவெடுத்திருக்கிறது பாரதீய மகிளா வங்கி. அனைத்து கிளைகளிலும் கோர் பேங் கிங் மற்றும் ஏடிஎம் வசதி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிராமங்களிலும் இந்த வங்கி கிளைகளைத் தொடங்கி வருகிறது.
பெண்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்ந்து அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில், பிஎம்பி அன்னபூர்ணா, பிஎம்பி பர்வரிஷ், பிஎம்பி ஷ்ரிங்கார் போன்ற திட்டங்களை இந்த வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது. பெண் தொழில்முனைவோர் அவர்களது இலக்கை அடைவதற்கு இவ்வங்கி ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருவது குறிப் பிடத்தக்கது. வீட்டிலிருந்தே கேட்டரிங் தொழில் செய்யும் பெண்களுக்கு, பிஎம்பி அன்னபூர்ணா திட்டம் கடன் வசதி அளிக்கிறது.
பர்வரிஷ் திட்டம் குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்க கடன் வசதி அளிக்கிறது .
அழகு நிலையம் தொடங்க விரும்புவோருக்கு ஷ்ரிங்கார் திட்டம் உதவுகிறது.
பெண் தொழில்முனைவோருக்கு ‘பிஎம்பி எஸ்.எம்.இ. -ஈஸி லோன்’ என்கிற கடன் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
கோமல் கலி என்பது பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டமாகும்.
பிஎம்பி ஸ்மார்ட்பேங்கிங் என்ற பெயரில் இன்டர்நெட் பேங்கிங் வசதியும் உள்ளது. இதில் இன்டர்நெட் மூலமாக ஆர்.டி.கணக்கு, ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளைத் தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆர்டி கணக்கான ‘கோமல் கலி’ யையும் இன்டர்நெட் மூலமே தொடங்கலாம்.
சேமிப்புக் கணக்கில், 1 லட்ச ரூபாய்க்கு நாலரை சதவிகித வட்டியும், ஒரு லட் சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு 5 சதவிகித வட்டியும் வழங்கப்படுகிறது.
இந்த வங்கியில் கணக்கு தொடங்குவோருக்கு வங்கியுடன் நீடித்த உறவு மலர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான், ஆட்டோ ஓட்டும் தொழிலாளி முதல் கார்பரேட் அலுவலக ஊழியர் வரை எல்லோருக்கு மான கடன் வசதித் திட்டங்கள் இங்கே உள்ளன. குறைந்தபட்சமாக 50 ரூபாயிலிருந்து கூட ஆர்.டி. கணக்கைத் தொடங்க முடியும்.
இவ்வாறு பெண்கள் தமது வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கும், இந்தியப் பொருளாதாரத்துக்கு தமது பங்கை அளிக்கவும் பாரதீய மகிளா வங்கி கருவியாக செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

Issues: