வேலை வாய்ப்பு

பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தொடர்ந்து தயாரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

பிரபல பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசுப்பணிகளில் பணியாற்ற விரும்பு வோர்களில் பெரும் பாலானோரின் தேர்வு வங்கிப்பணியாகத்தான்

இருக்கும். வங்கிப் பணியாளர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைப்பதே இதற்கு காரணம்.
எனவேதான் வங்கிப்பணி வாய்ப்பு குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பட்டதாரிகள் காத்திருப்பார்கள்.
இத்தகையோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான

அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்பது நாம் அறிந்ததே. இந்திய வங்கித்துறையில்

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’

தமிழகத்தில் 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு & சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களிலும் புதிதாக ஏற்படுத்தப்படும் நிறுவனங்களிலும் சிறப்பான மனித ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசால் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’ தொடங்கப் பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 25,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். 18 முதல் 25 வயது வரை உள்ள பொறியியல்,
தொழிற்கல்வியியல், தொழில் பட்டயபடிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய 6 மாத பயிற்சி அளிக்கப்படும்.

இகாமர்ஸ் துறையில் இன்னும் 6 மாதத்தில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்!

இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துவதாக புள்ளி விவரம் கூறுகிறது. உலக அளவில் சீனாவிற்கு அடுத்து அதிகம் இணையத்தை பயன்படுத்துவது இந்தியர்கள் என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது.
இணையத்தில் பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இணையம் வழியாகவே சேவையை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக இ-காமர்ஸ் வர்த்தகம் வருடத்திற்கு 30 சதவீதம் என்ற அளவிற்கு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இந்த இ-காமர்ஸ் துறையில் அடுத்த ஆறு மாதத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர்.