உழவன் அழுதால் நாட்டுக்கே கேடு

ஆடம் ஸ்மித்தை பொருளாதார இயலின் தந்தை என்கிறார்கள். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பே நமது

திருவள்ளுவர் பொருளாதார இயலை உருவாக்கிவிட்டார். அவரது பொருளாதார கருத்துக்கள் இன்றைய

காலகட்டத்துக்கும் பொருந்துகின்றன. திருக்குறளில் உள்ள பொருளதிகார குறள்கள் அனைத்தும் பொருளாதார

உண்மைகளைப் பேசுகின்றன.
வள்ளுவர் சொல்லுகிறார்:
‘பொருள் என்னும் பொய்யா விளக்கம்-இருள்
அறுக்கும் எண்ணிய தேய்த்துச் சென்று’
இந்த குறளின் பொருள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
மனிதயுகம் என்றைக்கு தோன்றியதோ அன்றைக்கே மனிதனின் தேவைகளும் தோன்றி விட்டன. நாடோடியாகத்தான்

மனிதன் தனது வாழ்வைத் தொடங்கினான். உண்ணுவதற்கு உணவைத் தேடுவதும், பருகுவதற்கு நீரைத் தேடுவதுமே

மனிதனது முக்கிய வேலையாக இருந்தது.
இப்பொழுது உள்ள தேச எல்லைகள், விசா, பாஸ்போர்ட் போன்ற தொந்தரவுகள் எதுவும் இல்லாத காலகட்டம் அது.
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது தொழில் யுகத்தில். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அனுபவத்தின்

வெளிப்பாடுதான் தொழில்யுகம் உருவாகக் காரணமாக அமைந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே தொழிற்சாலைகள் பெருகின.
அதற்கு முன்னர் நமது தமிழக பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சங்க காலம், சங்கம்

மருவிய காலம் இவற்றில் விவசாயமும் வணிகமும்தான் பிரதான தொழில்.
இந்த சங்க கால கட்டத்தில் திருவள்ளுவர் பதிவு செய்த பொருளாதார கருத்துக்கள் இன்றைய தொழில் யுக

காலத்துக்கும் பொருந்துவதுதான் திருக்குறளின் சிறப்பம்சம்.
அக வாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் ஒன்றிணைக்கும் பொருளை அதாவது செல்வத்தை முக்கிய அம்சமாக

குறிப்பிடுகிறார் வள்ளுவர். பொருள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதைத்தான் மேற்சொன்ன குறளில் வலியுறுத்தி

இருக்கிறார்.
இருட்டில் தடுமாறும் ஒரு மனிதனுக்கு விளக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதைப் போல வாழ்வின் தேவைகளை

நிறைவேற்ற பொருள் அவசியம் என்கிறார்.
ஒரு மனிதனுக்கு எப்படிப் பொருள் அவசியமானதாக உள்ளதோ அப்படியே அரசுக்கும் முக்கியமானதாக உள்ளது.
அரசின் பொருளாதாரம் வலிமையானதாக இருக்க வேண்டுமெனில், நாட்டில் உற்பத்தியை மேற்கொள்பவர்களை

ஊக்கப்படுத்த வேண்டும்.
வள்ளுவர் காலகட்டத்தில் விவசாயம்தான் முக்கியத் தொழில். தினம் தினம் உற்பத்தியாளர்களை கவனித்து அவர்களின்

குறைகளை களையச் சொல்கிறார்.
உணவு உற்பத்தி ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டால் நாட்டில் பஞ்சம்

தலைவிரித்தாடும். அதன் காரணமாக புரட்சி ஏற்படும்.
பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, அமெரிக்கப் புரட்சி இவற்றுக்கெல்லாம் ஆதாரத்தை ஆராய்ந்தால் பசி என்பது

புலப்படும். வறுமைதான் புரட்சிக்கு வித்திடுகிறது.
எனவேதான் வள்ளுவர் அரசனை எச்சரிக்கிறார்.
‘நாள்தோறும் நாடி முறை செய்யா மன்னவன்
நாள்தோறும் நாடு கெடும்.’
வள்ளுவரின் இந்தக் கருத்தை தற்போதைய அரசுகளும் உள்வாங்கிக் கொள்வது நல்லது. விவசாயத் துறையில் மிகுந்த

கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவிக்க வேண்டும். நீர்ப்பாசனத்திற்கு உள்ள தடைகளை உடனுக்குடன் சரி செய்ய

வேண்டும். உரங்களை நியாயமான விலையில் வழங்க வேண்டும்.
உணவைத் தருபவன் உழவன். எனவே உழவன் அழக் கூடாது. மகிழ்ச்சியோடு நிலத்தை உழ வேண்டும்.
அதற்கு அரசு உழவனுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இல்லையெனில் வள்ளுவர் சொல்வதுபோல்

நாட்டுக்கு கேடு விளையும்.
சந்திரசேகர்

Issues: