வேலை இழப்புக்கு ஆளாவோருக்கு கை கொடுக்கும் நண்பன்... ‘ஜாப் லாஸ் பாலிசி’
இன்றைய பொருளாதார சூழலில், வேலை கொடுக்கும் தனியார் நிறுவனங்கள், தேவையில்லை என்றால் எந்த நேரத்திலும்
பணியாட்களை வேலையிலிருந்து தூக்கி எரியும். எனவே ஒரு பணியாளர், தான் செய்யும் வேலை நிலையானது என்று
சொல்லி விட முடியாது. பணித்திறன் குறைந்தாலோ அல்லது நிறுவனத்தின் நிதி நிலை சரியில்லாமல் போனாலோ வேலை
எந்த நேரத்திலும் பறிபோகலாம்.
வேலையை இழந்த பணியாளர், வங்கியில் கடன் பெற்றிருதால் அவரது பாடு திண்டாட்டம்தான். தனிநபர் கடன், வாகன கடன்,
வீட்டுக்கடன் போன்றவை பெரும்பாலான பணியாளர்கள் வாங்கும் கடன்களாகும்.
வேலையை இழந்து விட்டால் அதன் சோகம் தரும் சுமையை விட, கடன் சுமை மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்க, ஜாப் லாஸ் இன்சூரன்ஸ் பாலிசி உதவுகிறது.
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லாம்பார்ட், ஹெச்.டி.எஃப்.சி எர்கோ போன்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஜாப் லாஸ்
இன்சூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன.
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனம் , இந்த பாலிசியை எடுத்தவர்களுக்கு வேலை இழப்பு காலகட்டத்தில் வீட்டுக் கடனுக்கான
3 மாத தவணையை செலுத்துகிறது.
இந்த பாலிசியை எடுத்தவர் வேலை இழந்தாலோ, உடல் நிலை சரியில்லாமல் போனாலோ, விபத்தில் காயங்கள் ஏற்பட்டாலோ
அவர் கடன் பெற்றுள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக 3 மாத தவணையை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்துகிறது.
இந்நிறுவனம் அளித்து வரும் ஹெல்த் பாலிசி, விபத்து காப்பீடு ஆகியவற்றில் இணைப்பு சேவையாக வேலை இழப்புக்கான காப்பீடும்
இணைக்கப்பட்டுள்ளது. 3 மாத தவணை காலத்தில், காப்பீட்டுதாரர் புதிய வேலையை தேடிக்கொள்ள ஏதுவாக அமைவதால் இந்த
பாலிசிக்கு வரவேற்பு கூடிக் கொண்டிருக்கிறது.
ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும் இத்திட்டத்தை இணைப்பு சேவையாக மட்டுமே அளித்து
வருவது குறிப்பிடதக்கது. பஜாஜ் அலையான்ஸ் நிறுவனம் விரைவில் இந்த பாலிசி திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைப்பு சேவையாக, ஜாப் லாஸ் பாலிசி இணைக்கப்பட்ட பின் காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கை
குறைந்த காலத்தில் 10 சதவீதம் உயர்ந்துஷீமீளதாக இந்த பாலிசி வழங்கும் நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.