வறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் வருமா?

இந்தியாவில், 30 கோடி பேர் மிக மோசமான வறுமை நிலையில் உள்ளதாக ஐ நா சபை தெரிவித்துள்ளது. இந்த 30

கோடி பேரில் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம்

ஆகிய மாநிலங்களில்தான் அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் உள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் 30 கோடி

பேர் வறுமையில் உழல்வது என்பது அவமானகரமான விசயம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையில்

வாடுகின்றனர் என்ற செய்தி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியால் யார் பயனடைந்தார்கள் என்ற கேள்வியை

எழுப்புகிறது.
ஒரு பக்கம், உலக அளவில் பணக்காரர்கள் என்ற பெருமையை அடைந்து வரும் இந்திய கோடீஸ்வரர்கள்..

இன்னொரு பக்கம், மழைக்கு ஒதுங்கக்கூட வீடில்லாமல் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் அடித்தட்டு ஏழைகள்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தாலும் ஏழை மட்டும் மேலும் மேலும்

ஏழையாகிச் செல்லும் நிலைமை எப்போது மாறும் என வினவுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
செல்பேசி, வாகனம், டி.வி போன்ற வசதிகளை ஏறக்குறைய அனைவரும் அடைந்து விட்டனர் என்று மேடையில்

முழங்கும் அரசியல்வாதிகள், ஐ நாவின் அறிக்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
இந்தியாவின் ஏழ்மை விகிதம் அதிகமாக உள்ள நிலையில் பில்லியனர்களின் வருமானம் மட்டும் அதிகரித்துக்

கொண்டே செல்வதைப்பற்றி இந்த அரசியல்வாதிகள் ஏன் முழங்குவதில்லை?
வறுமை, பசி, எழுத்தறிவின்மை, மோசமான சுகாதார சூழ்நிலை போன்ற பிரச்சனைகளில் இருந்து, கோடிக்கணக்கான

மக்களை விடுவிப்பதற்காக, ஐ நாவின் ‘மில்லீனியம் மேம்பாட்டு இலக்கு’ என்ற திட்டத்தை, 2000ம் ஆண்டில்,

இந்திய அரசு கடைபிடிக்கத் துவங்கியது. இந்தத் திட்டத்தின் கால அளவு வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
0 ஆனாலும் இந்தியாவால் வறுமையை விரட்டியடிக்க முடியவில்லை. கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை,

மின்சாரம் போன்ற வசதிகள் இல்லாத ஏழை மக்களை, தேர்தல் நேரத்தில் மட்டும் கைகூப்பி வணங்கும்

அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்தவுடன் அவர்களுக்கு பெப்பே காட்டி விடுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததா

என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள்,

காடுகள், மலைகள், பனி படர்ந்த பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் போன்றோர் வறுமையில்

சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு அரசிடம் திட்டம் இல்லையா அல்லது மனம் இல்லையா என்பதை அரசுதான்

விளக்க வேண்டும்.
விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்கூட விவசாயத்

தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதாக புள்ளிவிவரம் கூறுகிறது.
தொழில் வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படும் நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும்

வறுமையில் வாடுவதாக வந்துள்ள செய்தி தொழில் வளர்ச்சியால் என்ன பயன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
அதேபோல தரிசு நிலம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் வறுமையில் வாடுவதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும் தகவல் தொடர்பு வசதி, போக்குவரத்து வசதி போன்றவை இல்லாத கிராமப்புற மக்களும் வறுமையின்

பிடியிலிருந்து தப்ப முடியாதவர்களாக உள்ளனர்.
இப்படி வறுமையில் வாடும் ஏழைகளுக்கு விடிவு காலம் எப்போது வருமோ? காலத்துக்கே வெளிச்சம்!

முருகன்

Issues: