பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வல்லரசு நாடுகளுக்கு இணையாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தொடர்ந்து தயாரித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யா-இந்தியா கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த ஏவுகணைக்கு உலகின் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கும் ஆற்றல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பணி: மெக்கானிக்கல் டெக்னிக்கல் சூப்பர்வைசர்
சம்பளம்: மாதம் ரூ.45,104
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோவும் 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எலக்ட்ரிக்கல் டெக்னிக்கல் சூப்பர்வைசர்
சம்பளம்: மாதம் ரூ.45,104
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து, ஏரோபேஸ் [Aerospace] பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பணி: எலக்ட்ரானிக் டெக்னிக்கல் சூப்பர்வைசர்
சம்பளம்: மாதம் ரூ.45,104
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெக்னிசியன் (Fitter)
சம்பளம்: மாதம் ரூ.31,950
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Fitter/Tool & Die Maker பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெக்னிசியன் (Electrician)
சம்பளம்: மாதம் ரூ.31,959
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: டெக்னிசியன் (Electronics)
சம்பளம்: மாதம் ரூ.31,950
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Electronic Mechanic, Instrument Mechanic, Mechanic Industrial Electronics, Mechatronics போன்ற பிரிவுகளில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெக்னிசியன் (painter)
சம்பளம்: மாதம் ரூ.31,950
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்
தகுதி:Electropating Spray Painting பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி போன்ற இடங்களில் பணியமர்த்தப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டியமுகவரி:

The General Manager (HR & Pers),
Brahmos Aerospace Private Ltd,
16-Coriappa Marg,
Kirby Place,
Delhi Cantt.,
New Delhi-110010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 09.05.2015
இது குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.brahmos.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Issues: