யூலிப்பாலிசி: காத்திருந்தால் லாபம் நிச்சயம்...

இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு இரண்டும் சேர்ந்த திட்டம் தான் யூலிப்பாலிசி. கடந்த 2010 செம்படம்பர் முதல் இந்த திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன.
இத்திட்டத்தில் முதலீடு செய்வோர் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். ஐந்து வருடங்கள் கழித்து முதலீடு செய்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து நல்ல லாபத்தை தந்து வரும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.
யூலிப்பாலிசியை பொறுத்த வரை நல்ல லாபம் பெற 10 வருடங்களாவது காத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் பிரீமியம் கட்டும் திட்டத்தை தேர்ந்தெடுத்து இருந்தால் ஐந்து வருடங்களிலேயே லாபம் வளர்ச்சி அடைந்திருக்கும் என்று எண்ணக் கூடாது. நீண்டகால நோக்கில் தான் யூலிப் பாலிசியை அணுக வேண்டும்.
அந்த நோக்கில் பார்த்தால் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களிலேயே அதிக லாபத்தை தருபவை யூலிப் திட்டங்களே.
உதாரணமாக மனிபேக், எண்டோவ்மென்ட் போன்ற திட்டங்களில் கிடைக்கும் பலன் 5 சதவீத அளவுக்கே இருக்கும்.
ஆனால் 10 வருடம் அல்லது அதற்கு மேல் யூலிப் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு 12 முதல் 15% வரை பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
யூலிப் பாலிசியை முதலீடு நோக்கத்தில் எடுத்தால் குறைந்தபட்ச ஆயுள் காப்பீடு தொகையை மட்டுமே எடுக்கலாம்.
ஆயுள் காப்பீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாலிசி எடுக்க வேண்டும் என்றால் யூலிப் பாலிசை தவிர்த்து விட்டு டெர்ம் பிளானை தேர்ந்தெடுக்கலாம்.
மிக குறைந்த வயதில் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு யூலிப் பாலிசி சிறந்தது. 50 வயது கடந்தவர்கள் இந்திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.

ராஜாராம்

Issues: