நூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை!
இயற்கை சீற்றங்களால் நாட்டில் புயல்,வறட்சி, பஞ்சம், பட்டினி ஏற்படும்போது பொதுமக்களுக்கு
வேலைவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும். குறிப்பாக கிராமப்புற ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இப்படி பாதிக்கப்படும் கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்ச வேலை வாய்ப்பையும்,
வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தி கொடுப்பதற்காக மத்திய அரசால்,
மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம், தொடங்கப்பட்டது.
இத்திட்டம் மாற்றுப்பெயரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனவும்அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.
தற்போது சில மாநிலங்களில் 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும்
என்னென்ன தேவைகள் உள்ளனவோ, அவற்றை நிறைவேற்றும் வகையில் இத்திட்டப்பணிகளை
மேற்கொள்ள உள்ளாட்சிஅமைப்புகளுக்கு சுதந்திரமும், அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 25 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைந்துவருகின்றனர்.
குறிப்பிட்ட சில மாதங்களில் வேலையில்லாமல் அல்லல்படும் கிராமப்புறஏழை விவசாய
தொழிலாளர்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னால் அது மிகையில்லை.
இத்திட்டம் கடந்த 2006 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இத்திட்டம்
கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவண்ணாமலை போன்ற
மாவட்டங்களில் பிப்ரவரி 2006-ல் முதன் முதலில் துவங்கப்பட்டது.
பிறகு, மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப் பட்டது. 90 சதவிகித மத்திய அரசு நிதியிலும், 10
சதவிகித மாநில அரசு நிதியிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாள் கூலியாக
தமிழகத்தில் ரூ132ம், ஒரு சில மாநிலங்களில் ரூ214ம் அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற விரும்புபவர்கள், வயது வந்த கிராமப்புறநபர்களாக இருக்க வேண்டும்.
தங்கள் பெயர்,வயது, முகவரி இவற்றை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான பணி அட்டையை வழங்குவர்.
பணி அட்டையில் நபரின் விவரங்கள் புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். இத்திட்டம் ஒரு நிதியாண்டில்
குறைந்தது 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை உறுதி செய்கிறது என்பதை மேலேயே பார்த்தோம்.
இத்திட்டத்தின் காரணமாக கிராமப்புற வறுமை ஓரளவு போக்கப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி ஓரளவு அதிகரித்ததில் இத்திட்டத்துக்கும் முக்கியப் பங்குண்டு. கடந்த 6
ஆண்டுகளாக வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும், உணவுப் பொருட்களின் விற்பனையும் ஆண்டுக்காண்டு
அதிகரித்து வருவதாக ஆய்வு கூறுகிறது. இதற்குகாரணம், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி
அதிகரித்ததே.
இத்திட்டத்தின் மூலம் வாய்க்கால், ஏரி, குளம் போன்றவற்றை தூர் வாருதல், ஆற்றங்கரைகளில்
உள்ள அடைப்புகளை சரிசெய்தல், கிராமத்தில் புதிய மண்சாலை அமைத்தல், சாலை செப் பனிடுதல் போன்ற
பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளில், குறைந்தது 50% பணிகள் தடுப்பணைகளை
அமைப்பது, குளங்களை வெட்டுவது உள்ளிட்ட நீர்ப் பாதுகாப்பு பணிகளாக அமைய வேண்டும்
என்று தற்போதய பா.ஜ.க அர சு , பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பணிகள் நடைபெற்றால்
நாட்டின் நீராதாரம் அதிகரிக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.
இதற்காக, நீர்ப்பாதுகாப்பு பணிகளின் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில், பொருட்களை
வாங்குவதற்கான நிதியை 49% ஆக உயர்த்தியும், ஊதியத்திற்கான நிதியை 51% ஆக குறைத்தும் மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இதற்கு முன்பு, 60% ஊதியத்திற்காகவும், 40% தேவையான பொருட்களை வாங்கவும்
பயன்படுத்தப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
‘ஊதியத்திற்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டதால் ஏழை மக்களுக்கு போதிய அளவு வேலை
வழங்க முடியாது. இதனால் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து விடும்‘ என்ற
எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.
இத் திட்டத் தின் கீ ழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் ஏழை
தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியின் அடிப்படையில், தேசிய மனித உரிமைக்குழுவானது மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை
செயலாளருக்கும்,மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம்,பீகார், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா
மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் 2014ல் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.
இதன் பின்னர், மாநில அரசுகள் மிகுந்த கவனத்துடன் இத்திட்டத்தை அணுகுகின்றன.
‘சாதாரணமாக பத்து ஆட்கள் வேலை செய்து ஒரு நாளில் முடிக்கப்பட வேண்டிய வேலையை,
இத்திட்டத்தில் நூறு நபர்கள்செய்து முடிக்கிறார்கள். காலை எட்டு மணிக்கு
வேலையை தொடங்கும் ஆட்கள், சுமார் ஒரு மணி நேரம் மட்டும் வேலை செய்துவிட்டு
மரத்தடியில் படுத்து தூங்குகிறார்கள். மதியம் ஒ ரு மணிக் கு எ ழு ந் து வீ ட் டு க் கு கிளம்பிவிடுகிறார்கள்.
ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு வேண்டியவர்கள் வேலைக்கு வராமலேயே
ஊதியம் பெறுகிறார்கள். சோம்பேறியை மேலும் சோம்பேறியாக ஆக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’
என கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்தநூறு நாள்
வேலை வாய்ப்புத் திட்டத்தால் செம்மை பெற்று உள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.
அப்படி களையப்பட்டால் இது ஒரு மேம்பாட்டுக்கான திட்டம் என்பதில் ஐயமில்லை.
இந்தத் திட்டத்தினால் பல ஏழைக் குடும்பங்களின் வீட்டில் அடுப்பு எரிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எல்லாத் திட்டங்களிலும் ஊழல் இருப்பது போல் இதிலும் இருக்கிறது. அதை களைந்தால் நிச்சயம் இது மிகுந்த
பயன் அளிக்கும் திட்டமாகும் ’ எ ன் கி ன் ற ன ர் ச மூ க ஆர்வலர்கள்.
‘நூறுநாள் திட்டத்தில் , விவசாயப் பணிகளையும் இணைப்பது விவசாய வளர்ச்சிக்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும்
பெரும் உதவியாக அமையும்’ என்கின்றனர் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதியுறும் விவசாயிகள்.
இதற்கு உதாரணமாக அவர்கள் கேரளாவை சுட்டிக்காட்டுகின்றனர்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவில் இத்திட்டம் நன்றாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளை, தனியார் விவசாய
நிலங்களுக்கு அனுப்பி வேலை வாங்கப்படுவதால்,விவசாயம் அங்கு தடையின்றி நடைபெறுகிறது.
கூலியில் நில உரிமையாளர்கள் பாதிபொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.இதனால் விவசாயிகளுக்கு செலவு
மிச்சப்படுகிறது. இந்த நடைமுறையை தமிழகம்உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் பின்பற்றவேண்டும் என
விவசாயிகள் கோரி வருகின்றனர்.