விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் ரயில்வே பட்ஜெட்... மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதன் சாதக பாதகங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ரயில்வே மேம்பாடு, பயணிகளுக்கான வசதிகளை அதிகரித்தல், தூய்மையான ரயில், பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா, 5 நிமிடத்தில் டிக்கெட் பெறும் எளிய நடைமுறை, புகார் செய்ய கட்டணமில்லா தொலைபேசி, 9 வழித்தடங்களில் ரயில் வேகத்தை 200 கி.மீ. ஆக ஆக்குதல், கடற்கரை ரயில் வழித்தடம் அமைத்தல், 3,438 ஆளில்லா ரயில் கடவுகளில் ரூ.6,581 கோடியில் பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தல் போன்ற மேம்பாட்டுத் திட்டங்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை.
ரயில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு, எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருப்பதும் வரவேற்க்கத்தக்கது.
ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்கிற அம்சம் பரவலாக பேசப்படுகிறது. எனினும்,பெட்ரோலிய பொருட்களின் விலை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனால் தோராயமாக ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளதகவும், இதன் அடிப்படையில் ரெயில் கட்டணத்தை குறைத்து பயணிகளுக்கு நன்மை அளித்து இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறும் கருத்தை புறந்தள்ளிவிடமுடியாது.
புதிய ரயில்கள் ஆய்வுகள் முடிந்தபிறகே அறிவிக்கப்படும் என்று கூறியிருப்பது பயணிகளிடம் அதிருப்தியை தோற்றுவித்திருக்கிறது.
இந்த பட்ஜெட்டில், அத்தியாவசியப் பொருட்களான சிமென்ட், நிலக்கரி, இரும்பு, எஃகு, தானியங்கள், பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், யூரியா போன்றவற்றின் சரக்கு கட்டணம் 10 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஃகு பொருள்கள் மற்றும் யூரியாவுக்கு 10 சதவீதம், நிலக்கரிக்கு 6.3 சதவீதம், சிமென்ட்டுக்கு 2.7 சதவீதம் என சரக்குக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு, அவற்றின் உற்பத்திக்கான செலவிலும், விற்பனை விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.
இதனிடையே டோலோமைட், மாங்கனீசு, தரம் மேம்படுத்தப்பட்ட டீசல் ஆகியவற்றின் சரக்குக் கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டிருப்பது ஓரளவு ஆறுதலை தருகிறது.
மின் கட்டண செலவை குறைப்பதற்காக தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் முன்னதாகவே மின் ஒப்பந்தங்கள் போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், சுமார் ரூ.3,000 கோடி மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனிமையான பயண அனுபவம் பெறச்செய்தல்,பாதுகாப்பான பயணம், நவீன உள்கட்டமைப்புகள், பொருளாதார ரீதியில் ரயில்வே துறை தன்னிறைவுடன் செயல்படுதல் ஆகிய நான்கு இலக்குகள் ரயில்வே துறைக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும்,இந்த இலக்குகளை அடைவதற்கான வழிகளை கருத்தில் கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி, முதலீடு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டுகளில் இந்த அளவு முதலீட்டுத் தொகை ஒதுக்கப்படவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
தற்போதுள்ள 1,24,000 கி.மீ. வழித்தடத்தை 1,38,000 கி.மீ. ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் போது, ஒரு நாளைக்கு பயணிகள் எண்ணிக்கையை 2 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்த முடியும்.
இதற்கு முன்பாக ரயில் பெட்டிகளை அதிகரிக்கும் முயற்சியை எடுத்தாலே பயணிகள் எண் ணிக் கையை அதிகரிக்கமுடியும். இந்த முயற்சியை ரயில்வே துறை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
இதுவரை 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை இருந்தது. இனி 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. டிராவல் ஏஜெண்டுகள் இடங்களை முன்கூட்டியே பிளாக் செய்துவிடுகின்றனர் என்பதை முன்னிட்டுத்தான், 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 120 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டது பயன் தராது என்பதே பெரும்பாலோரின் எண்ணம்.
தட்கல் முன்பதிவில் முகவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால்தான் , ரயில் புறப்படும் 24 மணி நேரத்துக்குள் தட்கல் முன்பதிவுக்கான நடைமுறை வந்தது என்ற உண்மையை ரயில்வே அமைச்சர் உணராதது துரதிருஷ்டவசமானது.
ரயில்வே தனியார் மயமாகாது என்று அமைச்சர் கூறினாலும்,அது முழு உண்மையில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது.

ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

வயது முதிர்ந்தோர், ஊனமுற்றோர் வசதிக்காக வீல் சேர்களை ஆன்லைனில் புக் செய்து கொள்ளும் வசதி  விவசாயிகளுக்காக கிசான் யாத்ரா ரயில் சேவை ரயில்வே கார்டுகளுக்கு யோகா பயிற்சி  முதியோர் ஊனமுற்றோருக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க முன்னுரிமை பெரு நகரங்களில் சாட்டிலைட் ரயில்வே முனையங்கள் 
4 பல்கலைக்கழகங்களில், ரயில்வே ஆய்வு மையங்கள் புறநகர் ரயில்களில் ஏ.சி. பெட்டிகள்

பட்ஜெட் அளவு 52% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவு ரூ.1,11,000 ஆக உயர்வு  பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு 67% உயர்வு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தடங்களில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் வேகம் மணிக்கு 110 கி.மீ-ல் இருந்து மணிக்கு 160 முதல் 200 கி.மீ.-வரைஅதிகரிப்பு நாடு முழுவதும் 3438 ஆள் இல்லா லெவல் கிராஸிங்குகளை ஒழிக்க ரூ.6,750 கோடி ஒதுக்கீடு
108 ரயில்களில் இ-கேட்டரிங் சேவை அறிமுகம். குறிப்பிட்ட இந்த ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்யும் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தங்கள் உணவுக்கான ஆர்டரையும் பதிவு செய்யும் வசதி குறிப்பிட்ட சில ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு  ரயில் புறப்பாடு மற்றும் வரும் நேரம் குறித்து பயணிகள் மொபைல் போனுக்கு குறுந்தகவல்

சிமென்ட், யூரியா, இரும்பு உள்ளிட்ட 15 வகையான பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு ரயில் கட்டணம் உயர்வு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புறநகர் ரயில்களிலும், குறிப்பிட்ட தடங்களில் செல்லும் பயணிகள் ரயில்களிலும் சிசிடிவி கேமரா நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களில் வை-ஃபை சேவை  பயணிகள் மேல் அடுக்கு படுக்கையில் சுலபமாக ஏற வசதியாக ரயில் பெட்டிகளில் மடக்கு ஏணி

 அனைத்து ரயில்களிலும் பொது வகுப்புப் பெட்டிகளிலும் மொபைல் சார்ஜர் வசதி  ரூ.96,182 கோடியில் 77 புதிய ரயில்வே திட்டங்கள்  பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒதுக்கீட்டில் 67% அதிகரிப்பு முன் பதிவு செய்யாமல் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் நுழையும் அடுத்த 5 நிமிடங்களுக்குள் ரயில் டிக்கெட்டை பெறுவதை உறுதி செய்யும் வகையில், ‘ஆபரேஷன் 5- மினிட்’ என்ற சேவை

பழங்கள் மற்றும் காய்கறிகளை கெடாமல் பாதுகாக்கும் வகையில் நவீன குளிர் சாதன மையங்கள் தூய்மையான, சுகாதாரமான குடிநீர் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை ஒரே டிக்கெட்டில் ரெயிலிலும், பஸ்சிலும் பயணம் செய்யும் வசதி, மேலும் பல ரெயில் நிலையங்களுக்கு விரிவு ரயில் நிலையம் மற்றும் ரயிலின் தூய்மையை மேம்படுத்த தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

 7000 கழிப்பறைகள் பயோ டாய்லட்டுகளாக தரம் உயர்த்துதல்  பல்வேறு ரயில் நிலையங்களில் 650 கழிப்பறைகள் அமைத்தல்  ரயில் நிலையங்களின் தூய்மையைக் கண்காணிக்கவும் ,மேம்படுத்தவும் தனியாக ஒரு துறை மும்பை-ஆமதாபாத் இடையே புல்லெட் ரெயில்
ரெயில்வே மற்றும் தனியார் நிலங்களில் சூரிய ஒளி தகடுகள் அமைத்து 1,000 மெகாவாட் மின்சாரம் டெல்லி-மேகாலயா இடையே நேரடி ரெயில்  பிற வகை செலவினங்களுக்கு ரூ.13 ஆயிரத்து 200 கோடி.

நிதிப் பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடப்பதாகவும், எனவே ரயில்வே துறையில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு, கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறியிருப்பது தனியார்மயத்தை நோக்கி ரயில்வேதுறை செல்கிறதோ என்ற அச்சத்தை ரயில்வே ஊழியர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்றாலும் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது சரியாகாது. அரசே முதலீட்டை திரட்டுவதற்கான வழிமுறைகளை காணவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

சில சுற்றுலா வழித்தடங்களில், ரயில் பெட்டிகளில் சிலவற்றை லாபப் பகிர்வு அடிப்படையில் பயண முகவர்களிடம் விட்டுவிட இருப்பதாகரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு பெட்டிகளை ஒதுக்கலாம். ஆனால், லாபப் பகிர்வு அடிப்படையில் பயண முகவர்களிடம் ஒப்படைப்பது தவறான அணுகுமுறை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்
பாதுகாப்பு தொடர்பான அழைப்புகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி 182 அறிமுகம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.
அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்கு ரெயில்வேயில் ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 20 கோடி மதிப்பிலானா பதிட்டங்களைரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பட்டியலிட்டார்.

அதன் விவரம் வருமாறு:
 ரெயில் தடங்களில் நெரிசலை ஒழிப்பதற்கு ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 320 கோடி.
 ரெயில் தட விஸ்தரிப்புக்கு ரூ.19 ஆயிரத்து 320 கோடி
 வடகிழக்கு, காஷ்மீர் இணைப்பு போன்ற தேசிய திட்டங்களுக்கு ரூ.39 ஆயிரம் கோடி
 பாதுகாப்புக்கு ரூ. 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி
 தகவல் தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதற்கு ரூ.5 ஆயிரம் கோடி
 ரெயில் பெட்டிகளுக்கு ரூ. 1 லட்சத்து 2 ஆயிரம் கோடி
 பயணிகள் வசதிக்காக ரூ.1ரு லட்சம் கோடி
 அதிவேக ரெயில்கள் விட, பறக்கும் ரெயில் தடங்கள் அமைக்க ரூ.65 ஆயிரம் கோடி
 ரெயில் நிலையங்கள் அபிவிருத்திக்கு, தளவாட பூங்காக்கள் அமைப்பதற்கு ரூ.1 லட்சம் கோடி
பொதுவாக இந்த பட்ஜெட்டை தொழில் துறையினர் வரவேற்கவே செய்கின்றனர். எனினும் ரயில்வே கட்டணத்தை குறைக்காததும், புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

முருகன்

Issues: