மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கிய தமிழக முதல்வர்

ஏழு மாதங்களுக்குப்பிறகு  ஜெயலலிதா மீண்டும் 5–வது முறையாக முதல் அமைச்சராக பதவி ஏற்றதை தமிழக மக்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடினார்கள். கடந்த 7 மாதங்களாக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலோடுதான் தமிழக அரசு இயங்கினாலும் மக்கள், அம்மா இல்லையே என்று எதிர்பார்த்ததை காண முடிந்தது.
 

சில குறைகள் இருந்தாலும், கடந்த நான்காண்டு கால அதிமுக ஆட்சி மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. அதனால்தான் சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 44 சதவீத வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை அடைந்தது.

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் ஜெயலலிதா தீவிர முனைப்பு காட்டினார். கல்வித்துறையிலும், சுகாதாரத் துறையிலும், மனிதவள மேம் பாட்டிலும் இந்தியஅளவில் தமிழகம் முதல் இடத்திற்கு முன்னேறியதற்கு ஜெயலலிதாவின் திட்டங்களே காரணம். அதே போல தொழில் துறையிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.
மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றதும் மின்னல் வேகத்தில் பணிகளை தொடங்கி இருக்கிறார்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தலைமை செயலகத்துக்கு வந்து தனது பணியை தொடங்கினார்.
தனதுமுதல் பணியாக பல்வேறு சிறப்புத்திட்டங்களை அறிவித்தார். பின்னர்  தமிழகம் முழுவதும் புதிதாக 201 அம்மா உணவகங்களை,   திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் அவை திறக்கப்பட்டன.
 

தமிழகம் முழுவதும் காவல்துறைக்காக ரூ.444 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள், புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்களை அடுத்த நாள்  திறந்துவைத்தார்.
பிறகு 1032 ஊரகக் குடியிருப்புகள் திட்டத்தையும், 363 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு சுறுசுறுப்புடன் பணிகளை தொடங்கியிருக்கும் ஜெயலலிதா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு முன்பாக, அறிவித்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்து வார் என எதிர்பார்க்கலாம்.
அதேபோல துடிப்பான அரசு நிர்வாகத்தையும் பட்ட வர்த்தனமாக பார்க்கலாம். மேலும் தமிழகத்துக்கு முதலீட்டை குவிக்கும் முயற்சி யிலும் தீவிரமாக ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

 

Issues: