முயற்சியே மூலதனம்!

தெய்வத்தார் ஆகாதெனினும் முயற்சி - தன் மெய்வருத்த கூலி தரும்
என்றார் வள்ளுவர்.
ஒரு தொழிலை தொடங்குவதற்கு அடிப்படை முதலீடே முயற்சிதான். பணம், சொத்து என்ப தெல்லாம் பிறகுதான். முயற்சியோடு ஆர்வ மும் இருந்தால் பணத்தை எப்படி திரட்டுவது என்ற வழி முறையை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
ஒரு தொழில் முனைவோர் தனக்கு நன்கு தெரிந்த தொழி லையே தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அதற்கான முதலீட்டை திரட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.
தொழிலில் எவ்வளவு சிரமங்கள் நேர்ந்தாலும் முயற்சியை மட்டும் கைவிடவே கூடாது. அதனால்தான் வள்ளுவர் தெய்வத்தால் ஆகாத செயல்களை கூட முயற்சியால் செய்து விட முடியும் என்று கூறுகிறார்.
இந்த முயற்சியோடு புதுமை, உழைப்பு, தொடர்ந்து போராடுதல், நேர்மை, மனித தொடர்பு இவையெல்லாம் இருந்தால் எந்த தொழில் செய்தாலும் முன்னுக்கு வந்து விட முடியும்.
தொழில் தொடங்கியவர்களில், வெற்றி பெற்றவர்களை கணக்கிட்டால் 15 சதவீதம் பேர் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பார்கள். 15 சதவீதம் பேர் ஓரளவு வெற்றிபெற்றிருப்பார்கள்.
20 சதவீதம் பேர் வாழ்க்கை நடத்தும் அளவுக்கு தொழில் செய்து கொண்டிருப் பார்கள். 50 சதவீதம் பேர்

தழுவுகிறார்கள்.  சரியான வழிமுறைகளை கையாளாததே அவர்களின் தோல்விக்கு காரணம்.
ஒரு மீன் வியாபாரி அக்ரகாரத்தை, வியாபாரம் செய்யும் இடமாக தேர்ந்தெடுத்தால் அத்தொழிலில் வெற்றிபெற முடியுமா? செய்யும் தொழிலுக்கு இடமும், சூழலும் முக்கியம். வாடிக்கையாளர் களிடம் பேசும் போது கனிவும், மென்மையும் அவசியம்.
சரக்கு சுத்தமாக இருக்க வேண்டும். அதே போல பேச்சிலும் சுத்தம் இருக்க வேண்டும். நாணயம் தவறக் கூடாது.
எதிர்மறை எண்ணத்தை அறவே விளக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டால் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து குறைகளை கலைய வேண்டும்.
அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவது ஆபத்தை விளைவிக்கும்.  ரூ- 1 லட்சம் முதலீடு இருந்தால் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கலாம். ரூ.5 லட்சம் இருந்தால் ரூ.2 லட்சம் கடன் வாங்கலாம்.  

எப்பொழுதுமே 3 ல் ஒரு பங்குதான் கடன் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால்தான் எளிதில் கடனை கட்ட முடியும். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கினால் வட்டி குட்டி போட்டு பெரும் சுமை சேர்ந்துவிடும். இதனால் செய்யும் தொழிலில் தொய்வு ஏற்பட்டு தோல்விக்கு உள்ளாக நேரிடும்.
மக்கள் மனத்தை ஈர்ப்பவரே வெற்றி பெற்றவராகிறார். அவ்வாறு ஈர்ப்பதற்கு தொழிலில் தனித்துவம் இருக்க வேண்டும்.
தொழிலில் புதுமையும், வித்தியாசமும் இருந்தால்தான் தனித்துவத்தை காட்ட முடியும். தொழில் துறையில் இன்றைக்கு கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர்கள் யாவரும்  தீவிர முயற்சியோடு புதுமையை புகுத்தி தனித்துவத்தை காட்டியவர்களே. இக்கருத்து அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.
சந்திரசேகர்

 

Issues: