வீட்டுக் கடன் வாங்குவோருக்கு புதிய சலுகை!

இன்றைய நிலையில் ஒரு நபரால் கடன் வாங்காமல் வீடு கட்டுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. கடன் வாங்கித்தான் பெரும்பாலா னோரால் வீடு கட்ட முடிகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறுவோருக்கு சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ள நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவோர், வரம்புத் தொகை, முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம், இதர செலவுகள் போன்றவற்றை ஏற்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்தக் கட்டணங்கள் வீட்டுக்கான கடனில் சேர்க்கப்படுவது இல்லை.
வீடு வாங்கும்போது வீட்டின் விலையில் இந்தக் கட்டணங்களே சுமார் 15 சதவீதம் வரை வந்துவிடும். இதை வீடு வாங்குவோர் தனியே திரட்ட வேண்டும்.
இது வீடு கட்ட நினைக்கும் ஏழை நடுத்தர மக்களுக்கு சுமையாக இருந்தது. இந்த சுமையை தற்போது ரிசர்வ் வங்கி இறக்கி வைத்துள்ளது.
10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடனில், முத்திரைத் தாள் கட்டணம், பதிவு கட்டணம், டாக்குமண்டேஷன் கட்டணம் ஆகியவற்றையும் சேர்க்குமாறு, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறைந்த விலையிலான வீடு வாங்குவோருக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
2022 க்குள் சொந்த வீடில்லாத அனைவருக்கும் சொந்தமாக வீடு கிடைக்கும் நிலையை ஏற்படுத்துவோம் என பாஜக அரசு கூறியிருந்தது. அரசின் நோக்கம் நிறைவேற ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை ஓரளவு துணை புரியும் என நம்பலாம்.

கண்ணன்

Issues: