வருமான வாய்ப்பு

உழைப்பு அதிகளவில் இன்றி நமக்கு கிடைக்கும் நிரந்திர வருமானம்

பொதுவாக வருவாய் என்றால் பல வகைகளில் உண்டு. நாம் வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அப்படி இல்லையென்றால் நாம் ஒரு தொழில் தொடங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாய் என பல வகைகளில் உண்டு. இப்படி வருவாய் பல வகைகளில் ஈட்டப்படலாம். அதில் ஒரு வகை தான் passive income . 
நிரந்தர வருமானம் :

Passive income என்பது நம் உழைப்பு அதிகளவில் இன்றி நமக்கு கிடைக்கும் நிரந்திர வருமானம் ஆகும்

Crypto Industry உலகில் ஸ்டேக்கிங் முறையில் உயிர்ப்பற்ற வருமானத்தை(Passive income உருவாக்குதல்.

கிரிப்டோ கரன்சி மூலம் உயிர்ப்பற்ற வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழி ஸ்டேக்கிங்.

கணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்

பொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப்பு ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

 இந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.
தரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம்.

அழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்

ஒரு காலத்தில் பணக்காரப் பெண்கள் மட்டும்தான் பியூட்டி பார்லர்களுக்குச் செல்வதில் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அதிலும் நகரத்துப் பெண்கள் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். 
 
தற்பொழுது கிராமத்துப் பெண்களும் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அக்கறையோடு செயல்படுகிறார்கள்.
எனவேதான்  அழகுக் கலைப் பயிற்சி பெற்றவர்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கேற்ற சிறந்த தொழில் இது.

பூச்செடி வளர்ப்பில் வருமானம்...

பலருக்கும் பூச்செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பூச்செடிகளை மட்டும் விற்பனை செய்வதற்கு சிலர் பூச்செடிகளை வளர்க்கின்றனர். இன்னும் சிலர் பூக்களை மட்டும் விற்பனை செய்வதற்கு பூச்செடிகளை வளர்க்கின்றனர். இது ஒரு நல்ல தொழில் எனலாம்.    

கிராமபுறங்களில் அதிக அளவு திறந்தவெளி இடங்கள் இருப்பதால் அம்மக்கள் அதிக பூச்செடிகளை வளர்த்து  பூக்களை விற்கிறார்கள்.  குறைந்த அளவு நிலம் உள்ளவர்கள் கூட பூச்செடிகளை வளர்த்து பூக்களை விற்பனை செய்து இலாபம் அடையலாம்.

வருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்

வண்ண மீன் வளர்ப்புத் தொழில் சென்னையில் மிகவும் பிரபலமாக உள்ளது. சென்னை கொளத்தூரை சுற்றியுள்ள பகுதிகளான விநாயகபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். கடந்தநான்கு  ஆண்டுகளில் இத்தொழில் மிகவும் வளர்ந்திருக்கிறது.
 
வண்ணமீன் வளர்ப்பில் மிகவும் பெயர் பெற்ற நாடு சிங்கப்பூர். மேலும் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலும் இத்தொழில் மிகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் கொல்கத்தாவில் வண்ணமீன் வளர்ப்புத் தொழில் நன்றாக நடபெற்று வந்தது.

நல்ல வருமானம் தரும் பொக்கே தயாரிப்பு

குறிப்பிட்ட ஒருவரை சந்திக்கவோ அல்லது வரவேற்கவோ செல்லும் போது வெறுங்கையுடன் செல்வதைக் காட்டிலும் ஏதேனும் ஒன்றைக் கையில் கொண்டு சென்று தருவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்துத் தரப்பிலும் பொதுவான மரபாக இருந்து வருகிறது.  
முக்கியப் பிரமுகர்கள், பிரபலமானவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவும், வரவேற்கவும் மலர் மாலைகள், சந்தன மாலைகள், சால்வைகள், பரிசுப்பொருட்கள், பூங்கொத்துகள் உள்ளிட்டவற்றை வழங்கி கவுரவிப்பது வழக்கம். புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்படுவது உண்டு.

நூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....

மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பானதாக ஆகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான ரசாயன சேர்க்கை இருந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
 
இதன் காரணமாக அனைத்து நூடுல்ஸ் நிறுவனங்களும் தரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. மக்களும் தரமான  நூடுல்சையே தேடி வாங்கத் தொடங்கி விட்டனர்.
நூடுல்சை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் விருப்பம். அதனால்தான்  நூடுல்ஸ் உற்பத்தியும்  விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி

இன்றைய காலகட்டத்தில் விரைந்து செயல்பட வேண்டிய பணிகளுக்கு அவுட்சோர்சிங் பணியினை பலர் நாடுகின்றனர். இந்த பணிக்காக கேட்கப்படும் சேவை கட்டணத்தை தருவதற்கு வாடிக்கையாளர்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்ப தெல்லாம் சிறந்த சேவையே.

ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஆய்வறிக்கையை 100 சதவீதம் உண்மையுடன் வழங்கப்படும் குறிப்பே அவுட்சோர்சிங் பணியாகும். இந்த அவுட்சோர்சிங் பணிக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு முன்பே சிறிய வேலைகளில் கூட முழுத்தகவலுடன் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

வருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு

ஆட்டுக்கறியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. விலை அதிகரித்தாலும் மக்கள் ஆட்டுக்கறியை வாங்கத்தான் செய்கிறார்கள். காரணம் ஆட்டுக்கறியில் தான் பல்வேறு சத்துக்கள் அடங்கி உள்ளன. குறிப்பாக புரத சத்து மிக அதிகமாக கிடைக்கிறது. எனவே ஆடு வளர்ப்பு தொழிலை மேற்கொள்வோர் நன்றாக சம்பாதிக்கின்றனர்.

சமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்!

சமோசாவின் ருசி பலருக்கும் பிடித்தமான ஒன்று. கடைகளில் எத்தனை பலகாரங்கள் இருந்தாலும் முதலில் விற்றுத்தீர்வது சமோசாவாகத்தான் இருக்கும்.
சில கடைக்காரர்கள் சமோசாவை தாமே தயாரிகின்றனர். ஆனால் பல கடைக்காரர்கள் வெளியில் தயாரிக்கப்படும் சமோசாவை வாங்கித்தான் விற்கின்றனர்.
வடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை என்பதால்தான் கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை.
நல்ல தரத்தோடும் சுவையோடும் சமோசா தயாரிப்பவர்களிடமே கடைக்காரர்கள் வாங்குகின்றனர்.

Pages